கதையாசிரியர் தொகுப்பு: ஜெகதீஸ்வரன்

6 கதைகள் கிடைத்துள்ளன.

பரமனும் பன்னிக்குட்டியும்

 

  “டேய் பரமா, பக்கத்துல போவாதடா. குட்டிப் போட்ட பன்னி கடிச்சிடும்” அம்மாவின் எச்சரிக்கையால் சற்று தூர நின்றே பார்த்தேன். புசு புசுவென வெள்ளை பஞ்சை உருட்டி விட்டது போல மூன்று வெள்ளைக் குட்டிகள், இரண்டு கருப்பு குட்டிகள். தாய்ப் பன்னி படுத்துக் கிடக்க சுற்றிச் சுற்றி வந்து விளையாடின குட்டிகள். ஆசையோடு பார்த்துக் கொண்டிருந்தவனை “பன்னியைப் பார்த்து போதும், வீட்டுக்கு வா” என அழைத்தாள் அம்மா. நான் எங்கே பன்னிக் குட்டியை கையில் பிடித்துவிடுவேனோ என்ற