கதையாசிரியர் தொகுப்பு: ஜூனியர் தேஜ்

9 கதைகள் கிடைத்துள்ளன.

மதி நுட்பம் – ஒரு பக்க கதை

 

 “மகேஷ்… தாத்தா உன்கிட்டே பேசணுமாம்…” – செல் போனை ஊஞ்சலில் வைத்துவிட்டு மீண்டும் சுந்தரகாண்டம் பாராயணத்தைத் தொடர்ந்தாள் பாட்டி. “சொல்லுங்க தாத்தா…” என்றான் மகேஷ். அடுத்த நொடி “ சரி தாத்தா…” என்றான். வீட்டுக்குப் பக்கத்தில் இருந்த ஜெனரல் மெர்ச்சன்ட்டில் தாத்தாவுக்கு ‘அதை’யும், கடை வாசலில் இருந்த பூக்காரியிடம் பூஜைக்காக பாட்டி வாங்கும் பூவையும் வாங்கி வந்தான் மகேஷ். “பாட்டி…பூ…” பூவை ஊஞ்சலில் வைத்துவிட்டு வேகமாக மாடிக்கு ஓடினான் மகேஷ். மாடியில் இருந்த தாத்தா ரூமைத் திறந்தான்.


தன்மை இழவேல்

 

 ‘கதவே உடையற மாதிரி இப்படிக் காட்டுத் தனமா யாரு கதவிடிக்கறாங்க?’ என்று யோசித்தபடியே விரைந்து வந்து கதவுத் தாழ் நீக்கினார் சுந்தரபாண்டி. ஆசிரியர் கதவைத் திறந்து வெளியில் பார்த்தபோது செல்லதுரை தன் மகன் ராசப்பனோடு நின்றிருந்தார். ராசப்பனின் வலது கன்னம் வீங்கியிருக்க அவன் கண்களிலிருந்து அருவியாய்க் கொட்டியது கண்ணீர். அப்பா இப்படிச் செய்வார் என்று ராசப்பன் சிறிதும் எதிர்பார்க்க வில்லை. பூனைப் பார்வைக்குத் தப்பி புதைக்குழியில் விழுந்துவிட்டது போல ஆகிவிட்டது ராசப்பனின் நிலைமை. “கிளம்புடா… அந்தப் பய


ஜாதின்னா என்ன?

 

 ராமநாத கனபாடிகளின் பேரன் மகேஷ்க்கு தீராத குழப்பம். மகேஷின் அப்பா சோஷாத்ரி அரசு மருத்துவ மனையில் ‘டி எம் ஓ’. அம்மா லெக்ஷ்மி மருத்துவக் கல்லூரி விரிவுரையாளர். மகேஷுக்கு இரண்டு மூத்த சகோதரிகள். பெரிய சகோதரி ஊர்மிளா. இளைய அக்காள் மிருதுளா. ஊர்மிளாவும் மிருதுளாவும் கூட எம் பி பி எஸ் படித்த டாக்டர்கள் தான். மொத்தத்தில் அது ஒரு டாக்டர் குடும்பம். ஊர்மிளா, மிருதுளாவுக்குப் பிறகு பதினைந்து வருடங்கள் கழித்துப் பிறந்தவன் மகேஷ். வீட்டில் அனைவருக்கும்


கற்றது ஒழுகு

 

 “சாயாவனம்…சாயாவனம்…, உன்னை அய்யா கையோட இட்டாரச் சொன்னாரு…” ஓட்டமும் நடையுமாக வந்த செங்கரும்பின் அழைப்பில் அவசரம் தெரிந்தது. இன்றைக்கு மூன்றாம் நாள் சாயாவனத்தின் திருமணம். நாளை மறுநாள் அந்தியில் மணப்பெண்ணுக்கு பரிசம் போட்டுவிடுவார்கள். சாயாவனத்தின் கையில் காப்பு கட்டிவிடுவார்கள். வாடகைப் பந்தல் முனுசாமி, “நாளை காலைல வந்து பந்த போட்டுடறேன்..” என்று சொல்லிவிட்டுச் சென்றுவிட்டான். நாளை மதியம் பாரவண்டி அனுப்பினால் வாடகைச் சமையல் பாத்திரங்கள் வந்து சேர்ந்துவிடும். இன்று அந்தியில் மளிகை அனுப்பிவிடுவதாகச் செட்டியார் சொல்லி அனுப்பிவிட்டார்.


பூமி இழந்திடேல்

 

 தொழிலதிபர் சோப்ரா இந்த சமயத்தில் இப்படி ஒரு சிக்கலை எதிர்பார்க்கவில்லை. அதி நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய சாயத் தொழிற்சாலை தொடங்க ‘லொகேஷன்’ தேடிய சோப்ராவுக்கு அந்தக் கிராமம் மிகவும் பிடித்துப் போயிற்று. கிராம முக்கயஸ்தர்களை அணுகி நோக்கம் விளக்க நிலம் கேட்டபோது, ஊர் கூடி முடிவு செய்து, பல பேருக்கு வேலை வாய்ப்பைத் தரும் பெரிய தொழிற்சாலை தொடங்குவதை வரவேற்று நியாயமான விலையில் நிலம் தர முன் வந்தனர். தேவைக்கு மேல் ஒரு பங்கு அதிகமாகவே


முன்னதாகவே வந்திருந்து…

 

 பதினாலு வருடங்கள் என்பது ஒரு ஜெனரேஷன் என்று கணக்கு வைத்தால் சிவ முதலியார் ஐந்து ஜெனரேஷன்களைக் கடந்தவர். நல்லது கெட்டது எதுவாயிருந்தாலும் பத்திரிகையோ அழைப்போ வந்துவிட்டால் மட்டுமில்லை… தகவல் காதில் விழுந்துவிட்டால் கூடப் போதும், “பல வேலைகள்’ல நம்மை மறந்திருப்பாங்க …!” என்று சமாதானப்படுத்திக்கொண்டு, நேரில் சென்று கலந்துகொண்டு திரும்பவேண்டும் என்பதில் விடாப்பிடியாக இருப்பவர். அறுபத்தைந்து வயது வரை வீட்டில் யாரும் அவருக்குத் தடை சொல்லவில்லை. அறுபத்தைந்தாவது வயதில் ஒரு சஷ்டியப்தபூர்த்தி வைபவத்திற்காக திருக்கடையூர் சென்றபோது பஸ்ஸில்


வெட்டு ஒண்ணு

 

 பட்டங்கள் பல பெற்ற அறிவு ஜீவி சுந்தரலிங்கத்தின் கையைத் துண்டாக வெட்டும் நோக்கத்தோடு கபாலி அரிவாளை வீசவில்லை. ‘சும்மா மிரட்டி வைப்போம்,’ என்ற எண்ணத்தில் கபாலி அரிவாளைச் சுழற்ற; தற்காத்துக் கொள்ள கையை நீட்டிய சுந்தரலிங்கத்தின் கை துண்டாகி விட்டது. ஓரிரு வருடங்கள் எங்கெங்கோ சுற்றி அலைந்துவிட்டு ஊர்ப்பக்கம் வந்தான் கபாலி. ‘ஊரில் தன்னைப் பார்ப்பவர்கள் தூற்றுவார்களோ!’ என்ற அச்சத்துடன் வந்த கபாலிக்கு யாரும் அவனைக் கண்டு கண்டுகொள்ளாதது வியப்பைத் தந்ததது. டீக்கடைக்குச் சென்ற கபாலி, அங்கே


கல்விக் கண்

 

 ஆறு வயது மதிக்கத் தக்க ஒரு சிறுமியை ஒருவன் கையில் ஏந்தியிருக்க சுற்றிலும் ஆணும் பெண்ணுமாய்ப் பரபரப்போடு கூட்டம் தொடர அந்தச் சிறுமியின் வலது கண்ணில் குத்திநிற்கும் மரச்சிராய். ரத்தக் குழியில் முளை அடிதத்தைப் போல பார்க்கவே படு பயங்கரமாக. டாக்டர் தாமஸ் கண் மருத்துவமனையில் எப்போதுமே கூட்டம் நிரம்பி வழியும். டாக்டரிடம் சென்றதுமே கண்ணாடி எழுதித்தரும் டாக்டர்கள் மத்தியில் இவர் வித்யாசமானவர். முடிந்தவரை மருந்து, மாத்திரை, எக்ஸசைஸ், டயட் கண்ட்ரோல் இவற்றிலேயே குணப்படுத்திவிடும், மனிதநேயமிக்கவர் டாக்டர்


சிற்றன்னை

 

 ரெங்கநாயகி சமையல்கட்டில் பரபரத்துக்கொண்டிருந்தாள். சமையல்கட்டு வாசல்படியில் வந்து நின்ற ஷோபனாவிற்கு ரங்கநாயகி தன்னை கவனிக்காமல் சமையல் வேலையிலேயே மூழ்கியிருப்பது பாசாங்கு செய்வதாகப் பட்டது. ‘ஒரு வேளை உண்மையிலேயே தன்னை கவனிக்கவில்லையோ?’ என்ற சந்தேகமும் வர, ‘சித்தி குட்மார்னிங்,’என்று ஆரம்பிக்கலாமா..? அது ஏன், ‘குட்மார்னிங் அம்மா’ என்றே வாய் நிறைய அழைத்தால் என்ன? குழப்பம் வந்த்து. ‘அம்மா செத்துப்போய் இரண்டு வருஷம் கழித்து அந்த இடத்தை நிரப்ப இந்த ரங்கநாயகி வந்து மூன்று மாதம் முழுசாய் ஓடிவிட்டது. வந்த