கதையாசிரியர் தொகுப்பு: ஜீ.முருகன்

12 கதைகள் கிடைத்துள்ளன.

இரண்டாவது மரணம்

 

  அவனைத்தேடி அவனுடைய சகோதரன் வந்துவிட்டுப் போனதாக அலுவலகத்தில் சொன்னதும் குழம்பிப்போனான். வீட்டுக்கு வரச்சொல்லி தன்னுடைய விலாசத்தை ஒரு சீட்டில் எழுதிக் கொடுத்துவிட்டுப் போயிருந்தார். அவனுக்கு உடன் பிறந்த சகோதர்கள் யாரும் இல்லை. இருந்த ஒரே தம்பியும் பத்து வருஷங்களுக்கு முன்பே இறந்துபோய் விட்டான். தூரத்து உறவில் கூட அப்படி யாரும் இந்த நகரத்தில் வசிப்பதாக அவனுக்குத் தெரியவில்லை. எந்த சொந்தபந்தக் கொடிகளும் எட்டாத தூரத்திலிருக்கிற நகரமிது; யார் அவனைத் தேடி வந்திருக்க முடியும்? அவன் மறுத்தான்.


குரங்குகளின் வருகை

 

  சித்திரை மாதத்தில் ஒரு நாள் உச்சிப்பொழுதில் அவை காட்டைவிட்டு ஊருக்குள் பிரவேசித்தன. அப்பொழுது எங்கள் கிராமத்தில் பெரும்பாலானவர்கள் உறக்கத்தில் ஆழ்ந்திருந்தனர். இரவு முழுக்க கண்விழித்து கூத்துப் பார்த்த தூக்கமயக்கம் அவர்களை ஆட்கொண்டிருந்தது. மஞ்சள் நிற வேட்டியுடுத்தி, கைகளில் காப்புக்கட்டி, பூநூல் மாட்டியிருந்த கூத்தாடிகளில் பாதிப்பேர் நாடகக் கொட்டகையில் இடமில்லாமல் பண்ணை நிலங்களிலிருந்த மாட்டுக்கொட்டகைகளிலும், பம்பு செட்டுகளிலும், மரத்தடிகளிலும் படுத்து உறங்கிக் கொண்டிருந்தனர். அவ்வூர் சிறுவர்கள் உறங்கவில்லை. தண்டாயுதம், சூலாயுதம், ஆங்காங்கே ஜிகினா காகிதம் ஒட்டப்பட்ட வில்