கதையாசிரியர் தொகுப்பு: ஜி.மறைமுதல்வன்
மன்மதனுக்கு அம்னீஷியா!
மன்மதன் அவன் உடலைக் குத்தகைக்கு எடுத்திருந்தான். கல்யாணம் கட்டி ஆறேழு வருடங்கள் கழிந்து விட்ட இந்த வயதிலும் அவன் மட்டும் ஜெமினி கணேசனைப் போல [கமலைப்போல/சூர்யாவைப்போல என உங்கள் வயதுக் கேற்ப உவமையை மாற்றிக் கொள்ளுங்கள்] கன்னியரைக் கவர்ந்திழுக்கும் வசீகரத்துடன் இன்னும் இளமையாகவே இருக்கிறான். அவன் மனைவியோ காற்றடித்த பலூன் போல தொக்கையாக, கண்ணராவி யாக மாறிவிட்டாள். அவனுக்குச் சலிப்புத் தட்டிவிட்டது. திரும்பத் திரும்பப் பார்க்கிற ஒரே முகங்கள், தெருக்கள், மனைவி, பிள்ளைகள் . சுற்றிச் சுற்றி
தண்டனை
குறள்: ‘இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயஞ் செய்து விடல்‘ பாலாவைச் சிலவேளை உங்களுக்குத் தெரிந்திருக்கலாம் 70-80களில் இலங்கை வானொலியைக் கேட்பவராக நீங்கள் இருந்திருந் தால் பாலாவின் குரலையாவது நீங்கள் கட்டாயம் கேட்டிருப்பீர்கள். தொலைக் காட்சிகள் பரவலாக புழக்கத்துக்கு வருவதற்கு முன்னால், இலங்கை வானொலியும் அதில் ஒலிபரப்பான திரைப்படப் பாடல் களும் நாடகங்களும் தான் பாமர ரசிகர்களின் பிரதான பொழுது போக்குகளாக இருந்தன. அக்கால கட்டத்தில் வானொலியில் கோலோச்சிய ஒருசில நாடக நடிகர்களுள் பாலா பிரபல்யமானவன். பிரபல்யம்