கதையாசிரியர் தொகுப்பு: ஜி.கோமளா

5 கதைகள் கிடைத்துள்ளன.

ஆத்தா

 

  “நாடி விழுந்து நாளு நாலாச்சே.. இன்னமும் மூச்சு நிக்காம இழுத்துகிட்டிருக்கே.. ஏ ஆத்தா சிலம்பாயி.. எங்கைய்யா சாத்தையா.. என்ன கணக்கு வெச்சி இந்த சீவனை இழுத்துக்க பறிச்சுக்கனு விட்டிருக்கீகன்னு வெளங்கலையே..” – இன்னைக்கு பொழுது தாண்டாது என்று தான் குறித்துக் கொடுத்த கெடு தாண்டியும் உயிர் பிரியாமல் கெட்டிமாக நின்ற சேதி புரியாத குழப்பத்தில் புலம்பித் தீர்த்தாள் கருப்பாயிக் கிழவி. அந்த ஊர் வைத்தியச்சி. “அடிப் பாதகத்தி மகளே.. எனக்குப் பிந்தி வந்தவளே.. நீ ஒழச்ச


தேசம்

 

  வெளியே பலத்த மழை! வடக்கிலிருந்து தெற்காக சாய்வாக விழுகிறது சாரல். இரைதேடி இடுக்குகளில் புகும் நாகம்போல் கடைக்குள்ளே சரசரவென பரவுகிறது ஈரம். தண்ணீர் தொடாத இடமாகப் பார்த்து பசங்க ஆளுக்கு ஒரு பக்கமாக ஒதுங்கியிருக்கிறார்கள். பொழுதென்னவோ பிற்பகல்தான். ஆனால் அதனை சிரமப்பட்டுதான் நம்பவேண்டும். அத்தனை ஆக்ரோஷமாக இருட்டியிருக்கிறது. வானம் வெளுத்து, மழை மட்டுப்பட்ட பிறகுதான் வேலையைத் தொடர முடியும். கட்டிங் மெஷினில் பாதி வெட்டுப்பட்ட நிலையில் காத்திருக்கிறது பட்டி எனப்படும் இரும்புத் தகடு. மிச்சத்தையும் வெட்டினால்


வீடு

 

  காற்று விசையிடமிருந்து நீர்க்குமிழியை பத்திரபடுத்துவதுபோல பிடித்திருந்தாள் காகிதக் கற்றையை. ‘கோவை தாலுகா வசுந்தராபுரம் நேரு நகரில் உள்ள மனை எண் இரண்டு’ – அடுத்து வரும் வரிகள், அவ்வளவு சுலபத்தில் விளங்காத அரசாங்க வார்த்தைகளாக நீண்டன. ஆனாலும் வாசித்து மகிழ்ந்தாள். அவள் பெயருக்கு பதிவு செய்யப்பட்டிருந்த பத்திரம். தன்னுடையது என உரிமைகொள்ள கிடைத்துள்ள முதல் அசையாச் சொத்து. அந்தத் தாள்கள் கையில் கிடைத்த நாளில் பிரபஞ்ச ஆசிகள் முழுதாக தன்மேல் தூவப்பட்டதாக தோன்றியது அவளுக்கு. அகத்தின்

periyamanushi

பெரிய மனுஷி

 

  சூரியன் பிடிக்குள் உலகம் கைமாற இன்னும் நேரம் இருக்க, இருளையும் குளிரையும் போர்த்திச் சுருண்டு கிடந்தது ஊர். ராக்கோழிகளின் ஒலியும் நின்று, தீராச் சீக்காழிகளும் ரணம் மறந்து கண் அசந்த இரண்டாம் ஜாமத்தில், இமைக்கவே கற்றுக்கொள்ளாதவளாக விழித்துக்கிடந்தாள் பவானி. விஷயம் வெளி வந்தால் நிகழவிருக்கும் விளைவுகளை மனது திரும்பத் திரும்ப எடுத்துச் காட்டி எச்சரிக்க, பதிலாக சொல்லிக்கொண்ட எந்த தேறுதல் கம்பளியும் பலனளிக்காமல் உள்ளும் புறமும் நடுங்கின. யாரும் உணராமல் தான் தாக்குதலுக்கு உள்ளாக வாய்ப்புள்ள


சுருதி பேதம்

 

  எப்போதும் விருப்பத்துக்குரியதாக இருப்பது சமயத்தில் அதிகபட்ச வெறுப்புக்கும் உள்ளாகும் இல்லையா. அப்படித்தான் எனக்குப் பிடித்த, நான் சார்ந்திருக்கும் உத்தியோகம் இந்த நிமிடம் எனக்குப் பிடிக்காமல் போனது. நான் ஒரு பத்திரிகை நிருபர். இது சங்கீத சீஸன். இசைப் பிரியர்களின் வார்த்தைகளில் ‘டிசம்பர் சீஸன்’. நாரத கான சபாவில் நேற்று நடந்த கச்சேரி-யில் பாடிய புதுமுகப் பாடகி நித்ய கல்யாணி, ஒரே பாடலில் ராகங்களை வித்தியாசப்படுத்தி தசாவதாரம் எடுத்திருக்கிறார். அதுபற்றிய செய்தி உடனே தேவை. சாஸ்திரியைச் சந்தித்துச்