கதையாசிரியர் தொகுப்பு: ஜி.எச்.எஸ்.மணியன்

1 கதை கிடைத்துள்ளன.

காகிதப் பாலங்கள்

 

  “லெட்டர் எழுதிட்டு இருக்கேம்மா, இதோ வந்துட்டேன்…” “ஏண்டி, கௌசல்யா, போனவாரம்தானே ஒங்க அப்பா வந்துட்டுப் போனார். வெறுமனே அதுக்குள்ள என்ன லெட்டர்? என்ன… நாங்கள் சௌக்யம், நீங்கள் சௌக்யமான்னுதானே…!” “ஆமாம்மா, எங்க அண்ணாக்கு லெட்டர் எழுதி ரொம்ப நாளாச்சு; மன்னி வேற ரெண்டு லெட்டர் போட்டுட்டா…” “ரெண்டு லெட்டரா?… வொண்ணுதானே காண்பிச்சே?” “நேத்திக்கு ஒரு கார்டு வந்ததேம்மா. மிக்ஸி வாங்கிருக்கான்னுகூட எழுதலே?” “யாருக்கு ஞாபகம் இருக்கு அதெல்லாம்? ஒங்காத்துலே இருக்கறவா வாரம் பத்து லெட்டர் எழுதறா.