கதையாசிரியர் தொகுப்பு: ஜி.ஆர்.சுரேந்தர்நாத்

16 கதைகள் கிடைத்துள்ளன.

தீராக் காதல்

 

  கடவுள் ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும், ஒரு மகா அற்புதமான தருணத்தை எங்கேனும் ஒளித்துவைத்திருப்பார். எனக்கு முப்பத்தெட்டு வயதில், கொடைக்கானலில் வைத்திருந்தார். ஏரிக்கு எதிரேயிருந்த ஓட்டலிலிருந்து காலை ஆறரை மணிக்கு நான் வெளியே வந்தேன். குளிருக்கு இதமாக ஒரு சிகரெட்டைப் பற்றவைத்துக்கொண்டு, பனிப்புகையினூடே நடக்க ஆரம்பித்தேன். ஏரியைக் கடந்து, அப்சர்வேட்டரி ரோடுக்குச் செல்லும் மேட்டில் ஏறினேன். மரங்கள், சாலையை நோக்கி வளைந்து ஒரு குடை போல மூடி இருந்தன. ஈரத் தரையெங்கும் மஞ்சள் பூக்கள். மெலிதான சாரலில் நனைந்தபடி,