கதையாசிரியர் தொகுப்பு: ஜி.ஆர்.சுரேந்தர்நாத்

18 கதைகள் கிடைத்துள்ளன.

இளையராஜா

 

  இளையராஜாவின் இசை என்பது, வெறும் திரையிசைப் பாடல்கள் மட்டும் அல்ல; அது தமிழர்களுடைய வாழ்க்கையின் ஒரு மகத்தான பகுதி! குரல் தழுதழுக்க, என் முன்னாள் காதலியின் கடிதத்தைப் படித்து முடித்த என் மனைவி நந்தினி, ”யாரு இந்த ஜெஸ்ஸி?’ என்றாள். அப்போது அவளின் விழியோரம் எட்டிப்பார்த்த கண்ணீர், அடுத்து நான் சொல்லப்போகும் வார்த்தைகளைக் கேட்டு, கன்னத்தில் வழிவதற் காகக் காத்திருந்தது. நான் குரலில் எவ்வித உணர்ச்சியும் இன்றி, ”இந்த லெட்டர் உனக்கு எப்படிக் கிடைச்சது?’ என்றேன்.


பூக்கள் பூக்கும் தருணம்

 

  கவிதை எழுதுவதற்காகக் காலை ஆறு மணிக்கே அலாரம் வைத்து எழுந்த, “ஓ… பெண்ணே…’ என்று ஆரம்பித்து விட்டேனே தவிர மேற்கொண்டு ஒன்றும் ஓடவில்லை. ஒரு கணம் ஏன் இந்த வேண்டாத வேலை என்று தோன்றியது. எல்லாம் நேற்று என் நண்பன் மனோகரைச் சந்தித்ததால் ஏற்பட்ட பிரச்னை. பார்ப்பதற்கு மிகவும் சுமாரான மனோகர், கல்லூரி மேகசினில் கவிதை எழுதியே காலேஜின்… மற்றும் எங்கள் முனிசிபாலிட்டியின் ஆகச் சிறந்த அழகியான ஜோதியை வீழ்த்திவிட்டான். “”எப்படிடா?” என்று கேட்டபோது, “”மச்சி…


ஆண்

 

  சென்னை. இரவு. கிழக்குக் கடற்கரைச் சாலை. அந்தத் திறந்தவெளி பாரின் நடுவே, இளம் வயது ஆண்களும் பெண்களும் கட்டிப்பிடி நடனம் ஆடிக்கொண்டு இருந்தனர். அதுவும் ரெய்ன் டான்ஸ். ஸ்பீக்கரில் ‘யு ப்ளாங் வித் மி..!’ என்று டெய்லர் ஸ்விஃப்ட் அலறிக்கொண்டு இருந்தாள். ஆட்டத்தில் இடுப்புக்கு மேலே ஏறிவிட்ட ஜீன்ஸை, ஒரு பெண் அவசரமாக மீண்டும் இடுப்புக்கு கீழே இறக்கிக்கொண்டாள். பெண்கள் வயதுக்கு வந்தவுடன், ‘மாராப்பை ஒழுங்காப் போடுடி…’ என்று மறைக்கச் சொல்லிக் கற்றுத் தந்த சமூகத்தின்


ருசி

 

 


கடவுள் எழுதிய கவிதை!

 

  அவள் தன் செம்பொன் நிறப் பாதங்களை லேசாக உயர்த்தியபடி, நெற்றியில் விழுந்த தலைமுடியை இடக் கையால் ஒதுக்கிக்கொண்டு, உதடுகளைச்சுழித்து, கண்களைச் சுருக்கியபடி… தன் சிவந்த விரல்களால் வண்ணத்துப் பூச்சியை மெள்ள மெள்ளப் பிடிக்க முயன்றபோது, எனக்குத் தெரிந்து-விட்டது… அவள் கடவுள் எழுதிய கவிதை! ஈஸ்வரன் கோயில் வெளிப் பிராகார சுற்று மண்டபத்தில் அமர்ந்த-படி, அவளைப் பார்த்துக்-கொண்டு இருந்தேன். யாரிவள்? கோயில் சிற்பங்களில் உறைந்து கிடந்த தேவ கன்னிகை ஒருத்தி, வண்ணத்துப்பூச்சி பிடிக்க இறங்கி வந்துவிட்டாளா என்ன?