கதையாசிரியர் தொகுப்பு: ஜான் துரைராஜ்

4 கதைகள் கிடைத்துள்ளன.

கீழ்ப்படிதலுள்ள மகன்

 

 நல்நிசியில் நட்சத்திரங்கள் பளிங்குக் கற்களைப்போல் பிரகாசித்துக் கொண்டிருந்தன. அரேபியா தேசத்தின் வனாந்தரப் பகுதியில், ஆபிரகாம் என்ற அரசர், தனது ஆட்களுடன் கூடாரங்களில் தங்கி இருந்தார். நித்திரையில் ஆழ்ந்திருந்த அவருக்குத் திடீரென்று ஏதோ விபரீதமான சத்தம் கேட்டது. அது எங்கிருந்து வந்ததென்று அவருக்குத் தெரியும். ஆகவே மிகவும் பயபக்தியுடன் அந்த அசரீரிக்குச் செவி கொடுத்தார். “ஆபிரகாமே! ஆபிரகாமே ! உனது மகனாகிய ஈசாக்கை, எனக்குப் பலியிடு” என்று அழுத்தம் திருத்தமான வார்த்தைகள் அவருடைய காதில் விழுந்தன. ஈசாக்கு, ஆபிரகாமின்


விவேகத்தினால் கிடைத்த வெற்றி

 

 தலை நகரில் ஒரு பெரிய பந்தய ஓட்டம் நடந்தது. மேடையின் மேல் அரசன் வீற் றிருந்தான். ஒரு வாலிபனும், ஒரு இளம் பெண்ணும் ஆயத்தமாய் நின்று கொண்டிருந்தார்கள். பக்கத்தில் பந்தய உத்தியோகஸ்தர்கள் எக்காளத்துடன் நின்றார்கள். வாலிபன் மெலிந்திருந்தான். அவன் தலை மயிர் சுருண்டு அவனுக்கொரு தனியழகைக் கொடுத்தது. கால்களும் கைகளும் கடைந்து வைத்த சந்தனக் கட்டைகள் போலிருந்தன. முகத்தில் ஜெயம் பெற வேண்டுமென்ற ஒரு உறுதி காணப்பட்டது. பெண்ணின் உடை வெகு அலங்காரமாயிருந்தது. அவளுடைய வதனத்தில் உடனே


விவேகமுள்ள மந்திரி

 

 முன்னொரு காலத்தில் சக்கரவர்த்தி ஒரு வர் நமது தேசத்தை ஆண்டுவந்தார். குதி ரைகள் என்றால் அவருக்கு மிகவும் பிரியம். ஒரு நாள் குதிரை வியாபாரி அங்கு வந்தான். அவன் கொண்டுவந்த ஒரேகுதிரையை சக்கர வர்த்தி பார்வையிட்டார். பரி பார்ப்பதற்கு மிகவும் அழகாய் இருந்தது. அரபிக் குதிரையாகையால் ஐந்நூறு பொன் கொடுத்து அதை வாங்கிக் கொண்டார். அதைப்போல் இன்னொரு குதிரை இருந்தால் நன்றாய் இருக்குமே என்று அவருக்குத் தோன்றிற்று. உடனே அவர் அந்த வியாபாரியைப் பார்த்து, “இதற்குச் சரி


சிறந்த புத்திரன் யார்?

 

 ஒரு அரசன் தன் நாட்டை மிகவும் கீர்த்தி யுடன் ஆண்டு வந்தான். அவனுக்கு மூன்று புத்திரர்கள் இருந்தார்கள். அவர்கள் நன் றாய் வளர்ந்து பலசாலிகளாக யிருப்பது அர சனுக்கு மிகவும் திருப்தியைக் கொடுத்தது. என்றாலும் தனக்குப்பின் திறமையுடன் இராஜ்ய பரிபாலனத்தை நடத்தக்கூடிய மகன் யார் என்று அவனால் கண்டு பிடிக்க முடியவில்லை. ஒரு நாள் அரசன் தன் மூன்று குமாரர் களையும் கூப்பிட்டு, “எனது அருமைப் புத்தி ரர்களே ! எனக்கோ வயோதிகத்தன்மை வந்து விட்டது. எனக்குப்பின்