கதையாசிரியர் தொகுப்பு: ச.ராம்கபிலன்

1 கதை கிடைத்துள்ளன.

அடைமழை

 

  வடக்கு திசையில் கருமேகக்கூட்டங்கள் சேர்ந்து கொண்டிருந்தது. எதிர் திசையில் வீசும் காற்றினால் சைக்கிளை அழுத்த முடியவில்லை.பெரிய மழை வரக்கூடும் என்பதால் அருகில் இருந்த குடிசை வீட்டில் ஒதுங்கினேன். சைக்கிள் ஸ்டாண்டை போட்டு நிறுத்தியவுடனே மழை பிடிக்க ஆரம்பித்துவிட்டது. கார்ப்ரேஷனுக்கு வேலை வைக்காமல் தெருவில் உள்ள குப்பைகளை அடைமழையே அடித்துச் சென்றது.காய்ந்த தென்னை மரப்பட்டைகள் நிமிடத்துக்கு ஒன்று என்னும் கணக்கில் கீழே விழுந்தது. தூரத்தில் சட்டை அணியாத இரண்டு சிறுவர்கள் டைட்டானிக் கப்பலாக காகித கப்பலை மழைநீரில்