கதையாசிரியர் தொகுப்பு: சௌ.முரளிதரன்

54 கதைகள் கிடைத்துள்ளன.

தற்கொலை தான் முடிவு

 

  கல்பனா ஒரு முடிவுக்கு வந்து விட்டாள். இன்று தான் அவளது கடைசி நாள், இந்த பாழாய்ப் போன பூமியில். இந்த முடிவில் மாற்றத்திற்கே இடமில்லை. நோயிலும், வேதனையிலும் ஒரு நாளைப் போல சாவதை விட, ஒரேயடியாக போய் சேர்ந்து விடலாம். இது என்ன வாழ்க்கை, ஒரு பிடிப்பும் இல்லாமல், ? இந்த இருபத்திரண்டு வயதில் எல்லா வேதனைகளையும் அனுபவித்தாகி விட்டடது. போதுண்டா சாமி ! இதை விட நிம்மதியாகசெத்து மடியலாம். பாவம் கல்பனா, இரண்டு மூன்று


அவன் வழி தனி வழி

 

  “வாங்க சார், வாங்க” வரவேற்பு தடபுடலாக இருந்தது, அந்த வங்கிக் கிளையில். ஆர்பாட்டமாக வரவேற்றவர் அந்த கிளையின் மேனேஜர். சிரித்துக் கொண்டே உள்ளே வந்தவர் அந்த ஊர் வி.ஐ.பீ.. கோயில் டிரஸ்ட்டீ. மதுராங்கத்துக்கு பக்கத்தில் உள்ள, அந்த ஊரின் பெருமாள் கோயில், ரொம்ப பிரசித்தம். விசா வெங்கடேச பெருமாளுன்னு, அந்த கோவில் மூலவருக்கு அடைமொழி வேறே. வேலை தேடி வெளிநாடு போக ஆசைப் படுவோர், அந்த கோவிலுக்கு வந்து பதினோரு தடவை பிரகாரத்தை சுற்றினால், விசா


விளங்கவில்லை விமலாவிற்கு!

 

  பத்தாம் வகுப்பு பி பிரிவு. தேர்வாகட்டும், வினாடி வினாவாகட்டும், கட்டுரை பேச்சு போட்டியாகட்டும், பரிசை தட்டி செல்லும் மாணவர் உள்ள வகுப்பு. ஆனால் இந்த வகுப்பில் தான் சுட்டித்தனமும் , குறும்பும் வால் தனமும் கொஞ்சம் அதிகம். அன்று உயிரியல் பாடம். ஆசிரியை விமலாவின் வகுப்பு. புதிதாக மாற்றலாகி வந்த ஆசிரியை. அவருக்கு, கேள்வி பதில் மூலமாகத்தான் மாணவர்கள் கவனத்தை ஈர்க்க முடியும், தக்க வைக்க முடியும் என்பதில் அசையாத நம்பிக்கை. ஆனால், இந்த பத்தாம்


இறைவா ! இது நியாயமா?

 

  ராகவன், வயது 38. சென்னையில் ஒரு கல்லூரியில் விரிவுரையாளர். ஒரு விசேஷத்திற்காக, சகலை ராமனின் வீட்டிற்கு வந்திருந்தார். காஞ்சிபுரம். காமாட்சி அம்மன் கோயில் அருகே வீடு. ராமன் வயது 44, காஞ்சிபுரத்தில் பட்டு வியாபாரம். ஆன்மிகத்தில் கொஞ்சம் ஈடுபாடு. கோவில் தரிசனமெல்லாம் முடித்து விட்டு, ராகவனும் ராமனும் மொட்டை மாடியில் ஹாயாக அமர்ந்து வெற்றிலை பாக்கு போட்டுகொண்டு ஊர்க்கதை பேசிக் கொண்டிருந்தனர். அங்கே இங்கே என்று சுற்றி, வனிதா பற்றி பேச்சு திரும்பியது. வனிதா பக்கத்து


சங்கர ராமன்

 

  சங்கரன்: 15 ஜூன் 1960 மதியம் 3.30 சதய நட்சத்திரம், சங்கரன் ஜனனம். அப்பா சாரதி, அம்மா ராதை. சென்னையில் அண்ணா நகரில். சங்கரன் மூன்றாவது குழந்தை, இரண்டு பெண் குழந்தைகளுக்கு பிறகு. நடுத்தர வர்க்க குடும்பம். சாரதி ஒரு சைவ ஹோட்டல் நடத்திக் கொண்டிருந்தார். ஏற்ற இறக்கமான வாழ்க்கை. ‘அதிர்ஷ்டம் இல்லாதவனுக்கு கலப்பால் வந்தாலும், அதையும் பூனை குடிக்குமாமே?’ சாரதியின் ராசி அந்த வகை. ராமன்: 15 ஜூன் 1960 மதியம் 3.30 சதய