கதையாசிரியர் தொகுப்பு: சோம.வள்ளியப்பன்

13 கதைகள் கிடைத்துள்ளன.

நள்ளிரவில் ஒரு காப்பி

 

 (இது ஒரு மர்மக்கதையா? இருக்கலாம். அல்லது நகைச் சுவைக் கதையோ! அப்படியும் இருக்கலாம். இந்தக் கதை எனக்குப் புரியுமா? சாத்தியம் இருக்கிறது. ) ஒன்று இரவு மணி ஒன்றரை என்பதால் தெருக்களில் அதிக நடமாட்டமில்லை. ஆட்டோ படுவேகமாய்ப் போனது. ‘கதவைத் தட்டினால் திறக்கவேண்டுமே! அசந்து தூங்கிக்கொண்டிருந்தால்?’’ பாக்கெட்டில் இருந்த செல்போனை எடுத்தேன். ஸ்விட்ச் ஆப் ஆகியிருந்த அதை வேறு வழியின்றி மீண்டும் பேக்கெட்டுக்குள் வைத்தபோது ஆட்டோ எங்கள் தெருவுக்குள் நுழைந்துவிட்டது. தெருவில் ஐந்தாவது வீடு எங்களுடையது ’அட!


சாது மிரண்டால் (அ) குணங்கள்

 

 விழிப்பு வந்த பொழுது மணி சரியாகத் தெரியவில்லை. படுக்கை அறையின் கண்ணாடி ஜன்னல்களின் திரைச்சீலையினை மனைவி நன்றாக இழுத்து மூடியிந்ததும் ஒரு காரணம். ஓ..! இன்று ஞாயிற்றுக் கிழமையல்லவா, அதுதான். லீவு நாள் என்றால் அவள் அப்படித்தான் செய்வாள். அப்பொழுது , ‘சரட்’ என்று ஏதோ ஒரு பிளாஸ்டிக் பை கீழே விழுந்த சத்தம் கேட்டது. அந்தப் பை ‘கம்ப்பியூட்டர் டேபிள்’ மேல் அல்லவா இருந்தது. அது ஏன் கீழே விழுந்தது? அதை யார் தள்ளியது? முழுவதும்


முன்னேறி தெய்வம்

 

 ”என்னங்க… இன்னும் எவ்வளவு தூரம்?..” 35 அடி உயர ஆஞ்சநேயர் கோயிலை தாண்டினோம். கையில் அட்ரஸ் இருந்தது. ”இந்த வீடுதான் நினைக்கிறேன். நம்ம கல்யாணத்துக்கு முந்தி ஒருவாட்டி வந்திருக்கேன்” அதே வீடுதான். வாசலில் எஸ். ராமச்சந்திரன் என்று பெரிதாய் போர்டு இருந்தது. என் காலேஜ் நண்பன். உள்ளே நுழைந்தோம். ”இது யாருங்க? சமையல்காரர் வச்சிருக்கீங்களா?” என் காதில் மனைவி மெதுவாய் கிசுகிசுத்தாள். “ஸ்ஸ்.. கொஞ்சம் சும்மா வரமாட்டே.! அவர் அவனோட அப்பா.” எங்களை கவனித்து விட்ட அவன்


நெஞ்சமெல்லாம் நீ

 

 கணேசன் அவனுடைய அப்பாவுக்கு நீல நிற இன்லாண்டு லெட்டரில் கடிதம் எழுதிக் கொண்டிருந்தான். மற்ற விவரங்களை எழுதிவிட்டு, ”எனக்கும் எனது மேலதிகாரிக்கும் இரண்டு நாள்களாக ஒரு விவாதம். அதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று தெரிந்து கொள்ள விருப்பம். அது என்னவென்றால்..” என்று எழுதியபோது, வாசல் மணி அடித்தது. யோசித்தபடி கதவைத்திறந்தான். தந்தி சேவகன். அவன் அப்பா செத்துப் போனதாக தகவல். பஸ் ஏறினான். சென்னையிலிருந்து திருச்சிக்கு ஆறு மணி நேரம் பயணம். ”பயணம் ஒரு


பரஸ்பரம்

 

 பாண்டியன் ஒரு ஸ்டாப்பிங் முன்பாகவே இறங்கிக் கொண்டான். இங்கு இறங்கினால்தான் பூ வாங்க முடியும்.. வாங்கிக்கொண்டு நடந்து விடுவான். என்ன பதினைந்து நிமிட நடை தானே! ஈஸ்வரிக்கு ஜாதி பூ என்றால் மிகவும் பிடிக்கும். ஒரு முழம் வாங்கினான். ’பூ கூடவா உங்களால் தாராளமாக வாங்க முடியாது?’ ஈஸ்வரி தோள்பட்டையில் முகவாய்க்கட்டையை இடிப்பதும் ஒரு அழகுதான். ’இன்னொரு முழம் கொடும்மா’ சில்லறையைத் துழாவுகையில் பாக்கெட்டில் துருத்திக் கொண்டு நின்ற இன்சுரன்ஸ் செக் விரல்களில் பட்டு சந்தோஷப்படுத்தியது. ஐந்தாயிரத்து