கதையாசிரியர் தொகுப்பு: சொ.பிரபாகரன்

12 கதைகள் கிடைத்துள்ளன.

லிட்மஸ் நிறம் காட்டினால்….

 

 “லிட்மஸ் தெரியுமா? அமிலத்தில் ஒரு நிறம் காட்டும். அதுவே அல்கலினா வேற நிறம் காட்டும். அது மாதிரி மனுசாளோட நிறத்தையும் காட்ட ஏதாவதொரு நிறக்காட்டி ஒண்ணு வேணும்” ராகவன் சார் இப்படிதான் அடிக்கடி ஏதையாவது பிலாசபிக்கலாய் சொல்லி வைப்பார். ஆனால் கல்யாண் அதை வழக்கமாய் பொருட்படுத்துவது இல்லை. ஆனால் இன்று தலைக் கலைந்து, முகம் சோர்ந்து, பார்ப்பதற்கு ரொம்ப பரிதாபமாய் சார் தோற்றம் அளித்தார். “ராகவன் சார், மனசைப் போட்டு அலட்டிக்காதீங்க.. அமைதியாய் இருங்க.. எல்லாம் நாளா


சுமங்கிலி நோம்பு

 

 சீமா காலையில் விழிப்பதற்குத் தாமதம் ஆகிவிடும். வக்கீல் தொழில் பார்த்தால், இப்படி நேருவது சகஜம்தான். பகல் முழுசும், நேரம் நீதிமன்றத்தில் போய்விடும். அதற்குப் பின்னர், கட்சிகாரர்களுடன் வழக்குச் சம்பந்தமாய் பேச ஆரம்பித்தால், முடிப்பதற்கு நடுச்சாமம் கடந்துவிடும். பிறகு தூங்கி விழிப்பதற்கு, தாமதமாவது வாஸ்தவம்தான். படுக்கையில் ராகேஷ் இன்னும் இருக்கிறாரா எனக் கண்ணைத் திறக்காமல் தடவிப் பார்த்தாள். ரொம்ப நேரத்துக்கு முன்னாடியே எழுந்துப் போயிருந்திருப்பார் போலிருந்தது. படுக்கைக் கதகதப்பு இல்லாமல், குளிர்ந்துப் போயிருந்தது. எழுந்து, டிரஸ்சிங் டேபிளுக்கு ஓடினாள்.


ஒப்புதல் வாக்குமூலம

 

 ஆமாம், நான்தான் இதை செய்தேன். ராம்பூர் போயலியாவில் வசிப்பவனும் கோபேஷ் ரஞ்சன் பக்க்ஷியின் மகனுமான சாட்சாத் பாபேஷ் ரஞ்சன் பக்க்ஷி என்றழைக்கப்படும் நான்தான் இதைச் செய்தேன். அதுவும் மிகவும் தெளிவான மனநிலையில் செய்தேன். நான் எனது குற்றத்தை ஒப்புக் கொள்கிறேன். இந்த மாபாதகத்தை செய்ததிற்கு தண்டனை என்ன என்பதுவும் எனக்குத் தெரியும். யாருடைய வற்புறுத்தலோ. தூண்டுதலோ இல்லாமல், நானாகவே முன்வந்துதான் இந்த ஒப்புதல் வாக்குமூலத்தை தருகிறேன். நான் பாவம் செய்துட்டேன். இன்ஸ்பெக்டர்!! சரி, இப்போ நீங்களே சொல்லுங்கோ.


மத்தியதர வர்க்கத்து அண்ணாச்சி

 

 ராமசாமி அண்ணாச்சியிடம் இருந்து, அவரது மகனுக்குக் கல்யாணம் என்று திருமண பத்திரிகை லக்னோ அலுவலகத்துக்கு வந்திருந்தது. உடனே அண்ணாச்சி எங்க அகக்கண்களில் அப்படியே சதையும் உயிருமாய் விரிந்தார். அவர் இங்கிருந்து போய் ஒரு பத்து வருசம் இருக்குமா? இருக்கும்.. இங்கிருந்து போவதற்கு முன்னாடி, அவர் அந்தக் கடைசி வாரம் செய்த ரகளை, ஒரு காவியத்தன்மைக் கொண்டது.. முதலில் ஒரு கடுதாசியுடன் ரீஜினல் மேனேஜர் அறைக்குள் போனார். இந்த நரக வேதனை வேண்டாமென, வாலண்டரி ரிடையர்மெண்டல் போக, அப்ளிகேசன்


சுரங்கப்பாதை

 

 லக்னோ வந்தப்பறம் எனக்கு அறிமுகமான கிராமியப் பாடகர் பூவன். “பாருங்க பிரபாகர்! என்னைப் பற்றி என்னிடமே கேட்டுத் தெரிந்து கொண்டு, அதைத் தீசிஸாக ‘பூவனின் கிராமியப் பாடல்கள்’னு எழுதி, பல்கலைக்கழகத்தில் கொடுத்து, முனைவர் பட்டம் வாங்கி, தங்களுக்கு வளமான வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர்கள் ஏராளம். ஆனால் அவங்களை விடவும் கிராமியப் பாடல்களைப் பற்றி நன்றாக தெரிந்த நான், இன்னும் நடுத் தெருவில் சாப்பாட்டுக்கே வழியில்லாமல் அல்லாடிகிட்டிருக்கேன்..” என்று ஆத்திரத்துடன் சொன்னார். வீட்டுமுற்றத்தில் உட்கார்ந்து, அவர் முறையிடுவதைக் கேட்பதே