கதையாசிரியர் தொகுப்பு: செ.யோகநாதன்

27 கதைகள் கிடைத்துள்ளன.

நிழல்

 

 ஐராங்கனி கமலா சொன்னதைக் கேட்டதும் திடுக்கிட்டுப் போனாள். எந்த வித சலனமும் இல்லாமல் தான் சொன்னதைக் கேட்டுக் கொண்டிருந்துவிட்டு ராசசேகர னால் எப்படி அவ்வளவு பொறு மையாக தனக்கு புத்திமதியும் சொல்ல முடிந்தது என்பதை நினைத்தபோது அவளுக்கு வினோதமாகவும் இருந்தது. மனதிலுள்ளே தன்மீதே எரிச்ச லும் ஊர்வதினை அவள் உணர்ந்தாள். தொலைபேசி மணி அடித் தது. எடுத்துபோது எந்தத் தொடர்பு மில்லாமல் ஒருவன் அடிக்குரலில் பேசினான். இன் னும் எரிச்சல் மிளகாய்த் தூளாய் நெஞ்செங்கும் கொட் டிற்று.


திசைகள் ஆயிரம்

 

 குளிரூட்டப் பெற்ற அறை யில் மெல்ல – மிதக்கும் இன்னிசை. கம்ப்யூட்டர் திரை யில், ஓடுவதும் திரும்பி வருவது மாகப் பிஞ்சுக் குழந்தை ஒன்று. தன்னந்தனியாக அந்த அறை யில் இருந்தான் மனோகரன். உடல் எரிகிறாற் போலவே உணர்ந்தான். மனநிலை உடலையும் பாதித்திருக்க வேண்டும். குணவர்த்தனா சொன்ன ஒவ்வொரு சொல்லும் திரும்பத் திரும்பக் காதினுள்ளே அறைந் தது. அவர்கள் இருவரிடையே யும் பத்தாண்டு கால நட்பு, பல தடவைகள் அவர்களிடையே விவாதங்கள் நடைபெற்றிருக் கின்றன. வார்த்தைகளில் சூடு


மூன்றாவது பக்கம்

 

 தலையில் – அடித்துக் கொண்டே பத்திரிகையின் முக்கிய செய்தியினை இரண டாவது முறையாகவும் படித் தான் மூர்த்தி. மனதினுள்ளே எல்லையற்ற எரிச்சலும் வெறுப் பும் பெருகிற்று. அவனையறி யாத அருவருப்பும் உண்டா யிற்று. மூன்றாவது முறையும் பத்திரிகைச் செய்தியினைப் படித்தான். “எழுத்தாளர் பரசு ராமன் கைது. அரசுக்கு எதி ரான எழுத்து நடவடிக்கைதான் கைதானதற்குக் காரணமா?” தலைப்புச் செய்தியினை விளக் கிய உள்ளடக்கத்தில் பரசுராம னின் அரசுக்கு மாறான எதிர்க் குரலே இந்தக் கைதுக்கு அடிப் படைக்


பொய்முகம்

 

 மழை இலேசாகத் தூறிக் கொண்டிருந்தது. மின் விளக்கு ஒளியில் அந்தத் துமியல் பொட்டுப் பொட்டாய் சிதறினாற் போல் கண்கள் உணர்ந்தன. வாகனப் பரபரப்பு இன்னமும் தணியவில்லை . எதிரே வரும் வாகனங்களின் ஒளித்தெளிப் பையே பார்த்துக் கொண்டு நின்றான் சாந்த குமாரன். மனம் பரபரத்து அமைதியை இழந்து இனந்தெரி யாத அச்சத்தை அவனுள்ளே விதைகளாய்த் தூவிக் கொண்டி ருந்தது. ஒரு சின்ன மடைத்தனத் தால் இந்த நிலைமை வந்தது எனச் சலித்துக் கொண்டது மனம். ‘ஒமார் முக்தார்’


இருட்டும் வரை காத்திரு

 

 முன்கதை… அப்புவும் ஆச்சியும் அன்று மாலையே வீட்டிற்கு வந்து விட்டார்கள். வரும் போது அப்பு மாதுளங்கன்று ஒன்றையும் வெகுகவனமாக வாங்கக்கொண்டு வந்து, அன்னலெட்சுமியின் கையிலே மிகக்கனிவோடு கொடுத்தார். “நல்லசாதி மாதுளை. திணத்தடியில் வைச்சால் நல்லா வளரும் பத்திப் பக்கமாக இப்பகொண்டுபோய் வை. உன்ரை கையாலை வைச்சா நல்ல வளரும், முந்தியும் உன்ரை கையாலை வைச்ச மாதுளை நல்லாக் குலுங்கிக் காச்சுது”. அன்னலெட்சுமி மனதை அமுக்கும் இறந்த காலத்தின் நினைவுகளோடு அந்த மாதுளங்கன்றை அப்புவிடமிருந்து வாங்கிக் கொண்டு போய்


இருட்டும் வரை காத்திரு

 

 முன்கதை… அன்றைக்குப் பள்ளிக்கூடம் விடுமுறை நாள். பெட்டகத்தின் மேலுள்ள கடலைக் கடகங்கள், பெட்டிகள், காசுவைக் சம் அடுக்குப் பெட்டிகளை எடுத்துக் கழுவி வெய்யிலிலே காயப்போட்டுக் கொண்டிருக்கின்றாள் அன்னலெட்சுமி. மணி எட்டாகியும் இன்னமும் அவள் குளிக்கவில்லை. குறுக்குக்கட்டுடனேயே அலுவல்களில் சுழன்றுகொண்டிருக்கின்றாள். சின்னராசா, தாய்க்கு ஒத்தாசையாக, வான வெளியில் பறக்கும் பட்டத்தின் வாற்கயிறுபோல அவளைப் பின் தொடர்ந்து சென்று தொட்டாட்டு அலுவல்கள் செய்து கொண்டிருந்தான். பூவும் பிஞ்சுமாய் மூடியிருக்கும் வத்தகக் கொடிகளுக்குத் தண்ணீர் வார்த்துக்கொண்டிருக்கின்றான் மணி. அடிவளவு வேம்பின் கீழே,


இருட்டும் வரை காத்திரு

 

 மணி வாழைக் கன்றுக்கு நீர் வார்த்துக்கொண்டிருந்த சின்ன ராசா தாயின் குரலைக் கேட்டதும். பின்புறமாகச் சென்று அடுக்களையின் முன்னுள்ள மாமரத்தின் கீழே வாளியை வைத்து விட்டு என்னம்மா’ என்றபடியே அடுக்களைக்குள் போனான். அங்கே அவள் நிற்கவில்லை. தள்ளியுள்ள குடிசைக்கு அருகாக இறக்கப்பட்ட பத்திப் பக்கமாக அவனது தாய் நின்றாள். தாய் அன்னலெட்சுமி பெட்டகத் தின் மீதிருந்த கடலைக் கடகத்தை நன்றாக அடுக்கிக்கொண்டு புறப் படத் தயாராகிக்கொண்டு நின்றாள். அவளுக்கு முப்பத்தைந்து வயது. மெல்லிய தோற்றமுடைய சிவப்பி, அவளுடைய