கதையாசிரியர் தொகுப்பு: செ.கதிர்காமநாதன்

2 கதைகள் கிடைத்துள்ளன.

வெறும் சோற்றுக்கே வந்தது

 

 (1998 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) யன்னல்களைத் திறந்து விட்டால் வெளியே றோட்டுத் தெரிகிறது. நீண்ட, அகலமான, தார் ஊற்றப்பட்டு ஒப்பரவு செய்யப்பட்ட நேர்த்தியான றோட்டு அது. எந்த நேரமும் அந்த றோட்டு சுறுசுறுப்பாகக் காணப்படுகிறது. அடிக்கடி பஸ்களும், கார்களும், அங்குமிங்குமாக அலையெறிந்து கொண்டிருக்கும் மனித வெள்ளமுமாக, அது நிரம்பி வழிந்து கொண்டிருக்கிறது. ஒரு நாள் பூரா கண்ணாடி யன்னல்களைத் திறந்து வைத்துவிட்டு, அவளது பார்வைக்கு எட்டக்கூடிய தூரத்திலேயுள்ள அந்த


எட்டு மாதங்கள்

 

 சே! எவ்வளவு நேரமென்று இந்தப் பஸ்ஸிற்காகக் காத்துக்கொண்டிருப்பான் மனுஷன் …” ஒரு மணித்தியாலமாகப் பஸ்ஸிற்காகக் காத்துக் கொண்டிருந்த யாரோ ஒருவர் அலுத்துக்கொண்டார். அவர் அலுத்துக்கொண்டதையோ, பஸ் வந்து நின்றதை யோ கவனிக்காமல் தில்லைநாயகம் சிந்தனையில் மூழ்கி நின்றான் … கூட்டம் முண்டியடித்துக்கொண்டு – ஸ்ஸிற் குள் நுழைய முனைந்தது. “ஏய், இறங்கட்டுமே! என்னையா அவசரம் உயிர்போ றதுபோலே …!” கொண்டக்டர் அதட்டினார். கூட்டத்திற்கு இதற்கெல் லாம் மசிந்துபோக வேண்டும் என்ற நினைப்புத் தோன்ற வில்லை. ஆறுதலாக ஏறுவதிலும்