கதையாசிரியர் தொகுப்பு: செல்வா வினோத்

1 கதை கிடைத்துள்ளன.

விஷ் யு எ ஹாப்பி நியு இயர்!

 

  டிசம்பர் 31, கி.பி. 2100 ‘உலகமே’ புது நூற்றாண்டின் பிறந்தநாளை வரவேற்கத் தயாராகிக் கொண்டிருந்தது. அதாவது கடந்த வெள்ளங்களில் சிக்கி இறக்காத சிலரும், வெயிலின் தாக்கத்திற்கு எதிர்ப்பு சக்தி கொண்ட சிலரும், காற்று மாசுபாட்டால் பாதிக்கப்படாத சிலரும். நான் வேலை செய்யும் அலுவலகத்தின் மூலம், ‘எவேகோ’ நட்சத்திர ஓட்டலில் புத்தாண்டு சிறப்புக் கொண்டாட்டத்திற்கான ஓர் அனுமதிச்சீட்டுக் கிடைத்ததால் நானும் இரவை நோக்கி ஆர்வமாகக் காத்திருந்தேன். ஆறு மணியடித்தது… என் டபுள் ரோட்டார் ஹோவர்காப்டரில் ‘எவேகோ’வை நோக்கிப்பறந்தேன்.