கதையாசிரியர் தொகுப்பு: செய்யாறு தி.தா.நாராயணன்

71 கதைகள் கிடைத்துள்ளன.

சில திருட்டுகள்

 

  நான் எழுந்திருக்கும்போது விடியற்காலை நாலு மணி. சாராய ரெய்டுக்குப் போய் ராத்திரி ஒரு மணிக்குத்தான் வந்து படுத்தேன். அடித்துப் போட்டாற்போல உடம்பில் அப்படியொரு வலி. எழுந்து அவசரமாகக் குளித்துவிட்டுக் கிளம்பினேன். இப்ப பஸ் பிடிச்சால்தான் மதியத்துக்காவது திருச்சி போய் ஆஜராக முடியும்.. இன்றும் நாளையும் பந்தோபஸ்து டியூட்டி.. போன வாரம் சி.எம். ஃபங்ஷனுக்குப் போய், மூன்று நாட்கள் போட்ட யூனிஃபார்மோட, கால்களில் இழுத்துக்கட்டிய பூட்ஸ்களோட, ஐயோ! கொளுத்தும் வெய்யில், வியர்வையில் உள்ளாடைகள் மொடமொடத்துப் போய் அறுத்துவிட,


கீதாச்செடி

 

  அந்த வீட்டினுள் நுழையும்போதே அருவருப்பாக இருந்தது. குப்பென்று அடிக்கும் துர்நாற்றம் குமட்டலெடுக்கிறது.. மூக்கைப் பொத்திக் கொள்ள வைக்கிறது.. என்னதான் தினசரி ஐந்தாறு தடவைகள் டெட்டால் போட்டு கழுவினாலும் மூத்திர நாற்றம் போவதில்லை. அடைஅடையாய் ஈக்கள் கூட்டம். தரையில்,சுவற்றில்,அங்கே கொடியில் தொங்கிக் கொண்டிருக்கும் துணிகளில் எங்கும் நீக்கமற அழுக்குகள்….அழுக்குகள். “கீதாக்குட்டி!..ஆ காட்டு!..ஆ காட்றா.ஆ…ஆஆ…….!”——பெரியவர் ஒருத்தர் சோறு ஊட்ட, பெண் ஒருத்தி எவ்வித பாவங்களின்றி வாயை அகலத் திறந்து சோற்றை வாங்கிக் கொண்டிருந்தாள்.. ஒரு பார்வையிலேயே தெரிகிறது சித்தசுவாதீனமில்லாத


தோற்றப்பிழை

 

  “இங்கே எல்லா அரசியல்வாதிகளும் சாதிய வெச்சித்தானய்யா பொழப்ப ஓட்றாங்க. சாதிக் கலவரத்தைத் தூண்டி விட்றதே இவங்கதான்.பலியாவறது அப்பாவி ஜனங்க. இதான் நம்ம தலையெழுத்து. என்ன பண்றது?.” சமீபத்தில் மதுரைப் பக்கம் நடந்த சாதிச் சண்டையில் நாலைந்து பேர் செத்துப் போனதைப் பற்றி பேச்சு வந்த போது மதிவாணன் என்கிற எங்கள் மதிப்பிற்குரிய மதி சார் இப்படித்தான் தன் பேச்சை ஆரம்பித்தார். நாங்கள் என்பது மணி ஆகிய நான், நண்பர் தினகர், அப்புறம் தமிழ் வாசகர்களுக்கு பரிச்சயமான


லட்சுமணக்கோடு

 

  தங்கத்துக்கு விடியற்காலையிலேயே விழிப்பு தட்டி விட்டது. எழுந்து உட்கார்ந்தாள். சற்று முன் கண்ட கெட்டக் கனவு……?, வேர்த்துக் கொட்டுகிறது. தன் குடும்பத்தில் நடக்கப் போகும் ஏதோ ஒரு கெட்ட சம்பவத்திற்கான சமிக்ஞையாகவே அவளுக்குப் பட்டது. பக்கத்தில் தத்தம் கனவுகளுடன் உறங்கிக் கொண்டிருக்கும் மகள்களைப் பார்த்தாள். பெரியவள் சாந்திக்கு போன சித்திரையோடு முப்பது முடிந்துவிட்டது. சின்னவளுக்கு பதினொன்று. “பிள்ளையாரப்பா! மடியில நெருப்ப கட்டி வெச்சிங்கீறனே, ஆறேழு வருசமா தேடி அலையறனே. எங்கொழந்தைக்கு ஒருநல்ல எடத்த காட்டக் கூடாதா?.


செம்போத்து

 

  நாகேந்திரன் எனும் நாகு என்னைத் தேடிக் கொண்டு வீட்டுக்கு வந்த போது, காலை பத்து மணி. விஷயமில்லாமல் வரமாட்டானே. இது அவனுடைய பிஸி நேரமாச்சே. நாங்கள் டா போட்டு பேசிக் கொள்ளும் பால்யகால சினேகிதர்கள். “டேய்! வேணு! ரெட்டேரியில வெளிநாட்டுப் பறவைங்க எக்கச்சக்கமாய் வந்து எறங்கியிருக்காம்டா. கெளம்பு.”. வேலைகளை அப்படியப்படியே போட்டுவிட்டு சந்தோஷமாய் கிளம்பிவிட்டேன்.நான் ஒரு பறவை நேசன். ஆர்னித்தாலஜி சம்பந்தமாய் நிறைய தெரியும்..கோல்டன் ஈகிளைப் பற்றி உங்களுக்குக் கூட தெரிஞ்சிருக்கலாம்,ஆனால் அது வருஷத்திற்கு ஒரு