கதையாசிரியர் தொகுப்பு: செய்யாறு தி.தா.நாராயணன்

61 கதைகள் கிடைத்துள்ளன.

ஊரு ஒப்பு

 

  சாயங்காலம் அப்பாவுடன் கோயிலுக்குக் கிளம்பும் போது, கோயில் திடலில் இன்னிக்கு ஊர் கூட்டம் இருக்குடா என்றார். “ஏம்பா! மரத்தடி பஞ்சாயத்து மேடை, நசுங்கிப் போன சொம்புல தண்ணி, நாட்டாமையின் எவடியவ கத்தல், வெத்தலைய போட்டு புளிச்..புளிச்னு எச்ச துப்பறது, அடாவடி தீர்ப்பு, இதுங்களை இன்னும் நீங்க விடவே இல்லையா?.”–அப்பா சரிக்கு சரி நக்கலடிப்பார். ”ஜோக்கா இது?. சரி நான் சிரிச்சுட்டேன்.” நான் பி.டெக். முடிச்சப்புறம், பூனாவில் டி.சி.எஸ்.ல ஜாய்ன் பண்ணி பதினோரு வருஷங்கள் ஆகிவிட்டன.. ப்ளஸ்


சப்த கன்னிகள்

 

  ஐயய்யோ! இன்னா கொடுமைய்யா?. பத்து வயசு புள்ளைக்கு வரக்கூடிய வியாதியா இது?.”— சண்முகம் வீட்டின் முன்னால் நின்று ஒருத்தர் உரக்க பேசிக் கொண்டிருக்க, வெளியே ஒரு நாலைஞ்சி பேர் கூடியிருந்தாங்க. வீட்ல அழுவுற சத்தம் தெரு வரைக்கும் கேக்குது. தெரு ஜனங்க ஒவ்வொருத்தராக சண்முகம் வீட்டுக்கு போறதும் வர்றதுமாக இருந்தாங்க. பிரதானமாய் நெசவுத்தொழில் நடக்கும் ஊர் இது. காலையில் எழுந்ததும் எல்லாரும் தெருவுக்குத் தெரு பாவு விரிச்சி போட்டு தோயறதும், சாயங்காலம் தறியிலிருந்து இறங்கியதும் குளிச்சிட்டு


உறவுப் படிகள்

 

  அதிகாலை இருட்டு மெதுவாக விலகிக் கொண்டிருக்க, ஊர் அப்போதுதான் எழுந்து மெதுவாக சோம்பல் முறிக்க ஆரம்பித்திருந்தது. வெளியே சஞ்சாரங்களின் கலவையான சத்தங்கள். இன்னும் கூட முழுமையாக இருட்டு விலக வில்லை. ரொம்ப நேரமாக காகம் ஒன்று ஒத்தையாய் முருவன் வூட்டு கூரைமேல வந்து உட்கார்ந்துக்கிட்டு உயிர் போற மாதிரி நாராசமாக கத்திக்கிட்டே இருக்கு. முருவன் பொண்டாட்டி கஸ்தூரி கைவேலையை அப்படியே போட்டு விட்டு ஓடிப்போயி ச்சூ..ச்சூன்னு விரட்டி விட்டாள். ஊஹும்! திரும்பவும் வந்து அதே இடத்தில்


நம்பிக்கை வித்துகள்

 

  போன வருஷம் சென்னையும், கடலூரும், காஞ்சிபுரமும், மழைவெள்ளத்தில் முழுவிப் போச்சில்ல?, அப்பத்தில இருந்துதான் சார் இங்க பத்திரிகைகள் கிட்டேயும் சரி, மக்கள்கிட்டேயும் சரி, தூர்ந்து போன ஏரிகளையும், கால்வாய்களையும் பத்திய விழிப்புணர்வு வர ஆரம்பிச்சது. ஆமாம் தான?. ஆனா எங்க ஊர்ல பாருங்க ரொம்ப காலமாகவே அந்த பிரச்சினைய பேசிக்கிட்டிருக்கோம். வேறொண்ணும் பண்ணல பேசிக்கிட்டிருக்கோம். இன்னிக்கிக் கூட பாருங்க ஈஸ்வரன் கோயில் எதிரிலிருக்கும் ஆலமர நிழலில் மீண்டும் இந்த விஷயம் பிரஸ்தாபிக்கப்பட்டது. பிரஸ்தாபித்தது பெரியபெர்தனம் கந்தப்பன்


யாத்திரை

 

  அவர் அந்த வார்த்தையைச் சொன்னபோது வீட்டில் ஒருத்தரும் நம்பவில்லை. அவருடைய ஒரே பிள்ளையும், இரண்டு பெண்களும் சிரித்தனர். மனைவி சங்கரி மட்டும் அவர் பக்கம். “நீங்களாப்பா சொல்றீங்க இதை?.” “எஸ்! நான் தான் சொல்றேன். திருநள்ளாறுக்குப் போயிட்டு வரணும், அங்கே சனீஸ்வர பகவானுக்கு ஒரு அர்ச்சனை பண்ணிட்டு வரணும்.” “எதுக்கு?.” “சின்னவ ஜாதகத்தில தோஷமிருக்காம். அதனாலதான் திருமணம் கூடிவரல. திருநள்ளாறில் சனீஸ்வர பகவானுக்கு ஒரு அபிஷேகம் பண்ணிட்டால், கல்யாணத்தடை நீங்கிடுமாம். இது பரிகாரம்டா.” “இதை நீங்க