கதையாசிரியர் தொகுப்பு: செம்பியன் செல்வன்

1 கதை கிடைத்துள்ளன.

பாதி மலர்!

 

 சரசு யன்னலுக்கூடாக வெளியே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள். அவள் உள்ளத்தைப் போலவே வெளியே வெறுமை முத்திரையிட்டிருந்தது….. வெளியே – சித்திரை மாதத்துக் கோடை வெயில் தகித்துக் கொண்டிருந்தது. அந்த வெயிலின் தகிப்பிலே ‘தார் றோட்’டெல்லாம், உருகி அவற்றின் மேற் கானல் நெளிந்தாடிக்கொண்டிருந்தது… அந்தத் தார் றோட்டில் அந்த உச்சிப் பொழுதில் ஒருகாக்கைக்குருவியைக் காண வேண்டுமே?… இடையிடையே அந்தப் பாதையிற் பயங்கரமாக ஓசையிட்டுக்கொண்டுவரும் லாரிகளையும், கடகடவெனத் தனது வருகையைப் பறைசாற்றி வரும் ‘இ.போ.ச.’ பஸ் வண்டிகளையும் தவிர எந்தவிதப் போக்கு