கதையாசிரியர் தொகுப்பு: சென்றாயகுமார்

1 கதை கிடைத்துள்ளன.

சித்தவைத்தியர் சாம்புகன்

 

  கூட்டம் அதிகமாக இல்லை! அப்படி இப்படின்னு ஒரு பத்து பதினைந்து சொச்சம் ஆட்கள் இருப்பாங்க ! சாம்புகன் வீட்டின் முன்பு நின்னுருந்த போலீஸ் வண்டியின் பக்கத்தில் எல்லோரும் நின்னுருந்தனர். ‘யோவ் ! பெருசு… பாக்க எழுவது வயசுக்கு மேல இருப்பபோல பேசாம தின்னுட்டு வீட்டுல இருக்காம உனக்கு இதெல்லாம் தேவைதானா” சாம்புகனை கைத்தாங்களாக போலீஸ் வண்டிக்கு கூட்டிகிட்டு வந்த ஏட்டு பொன்னுசாமி சொன்னார். உருகிப்போகாத உடம்புடன் கட்டு மஸ்தாக தெரிந்தாலும் நடந்துவர ஒரு ஆள் துணை