கதையாசிரியர் தொகுப்பு: செங்கை ஆழியான்

1 கதை கிடைத்துள்ளன.

கருப்பியைக் காணவில்லை!

 

 விடிந்ததும் விடியாததுமான வேளை. மாணிக்கப் பெத்தாச்சி சுருட்டைப் புகைத்தபடி கறுப்பியைக் கூப்பிட்டுப் பார்த்தாள. பெத்தாச்சியின் ஒரு குரலிற்கே ஓடி வந்துவிடும் கறுப்பியைக் காணவில்லை. ‘எங்கோ போயிட்டுது’ என்று முதலில் தனக்குச் சமாதானம் கூறிக் கொண்ட பெத்தாச்சியால், நேரம் செல்லச் செல்லப் பொறுக்க முடியவில்லை. மீண்டும் மீண்டும் கூப்பிட்டுப் பார்த்தாள். கறுப்பியைக் காணவில்லை. சுருக்கம் விழுந்த பெத்தாச்சியின் முகத்தில் கவலை குடிகொண்டது. வளவ முழுவதும் கறுப்பியைத் தேடிப் பார்த்தாள். கிணற்றுக்குள்ளும் எட்டிப் பார்த்தாள். வேலிகளின் பொட்டுகள் ஊடாசப் பக்கத்து