கதையாசிரியர் தொகுப்பு: சூர்யா

91 கதைகள் கிடைத்துள்ளன.

கமலா

 

  கமலாவிற்கு காலை ஐந்து மணியிலிருந்து வேலை ஆரம்பமாகி விடும். வாசல் தெளித்து கோலம் போடுவதிலிருந்து. காபி. சமையல் என ஒரு சுற்று முடித்து கடைக்குட்டி வித்யாவிற்கு பல் தேய்த்து விட்டு. குளிப்பாட்டி. சாதம் ஊட்டி பள்ளிக்கு செல்லும் ஆட்டோவில் திணிக்கும் வரை பெண்டு நிமிர்ந்து விடும். இதற்கு நடுவில் அவள் வாங்கிய திட்டுக்கள். ஏற்பட்ட டென்ஷன்கள். 1 . கணவன் சரவணன் – அடியே காபில ஏண்டி இவ்ளோ சர்க்கரைய அள்ளி போடுற. ஒரு அளவு


மழை

 

  குளிர்ந்த நீரின் முதல் துளி உடலின் மேல் தோலை ஸ்பரிசிக்கும் சில்லென்ற முதல் உணர்வு அனுபவிக்கும் ஆசை பிறந்த முதல் பருவம் இளம் பருவம். 6 ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் பொழுது. மாலை நேரம் ஆசிரியர் பாடம் எடுத்துக் கொண்டிருந்தார். மணி 3.45 ஐ தொட்டது. ஆசிரியருக்குத் தெரியாமல் புத்தகங்களையெல்லாம் பைக்குள் திணித்துக் கொண்டிருந்தேன். ஏனென்றால் 4 மணிக்கு பள்ளி விட்டுவிடும். அந்த மணி அடிக்கும் சப்தம் தேனாக காதில் ஒலிக்கும். அந்த சந்தோஷத்தை


பரம்பரை

 

  Watch me deeply என்று எழுதப்பட்ட பச்சை நிற முண்டா பனியனை தொப்புள் வரை மட்டுமே அணிந்திருந்த அந்த பெண்ணை ராகவனும் கர்ணனின் கவச குண்டலத்துக்கு இணையாக உடலோடு உடலாக சேர்த்து தைக்கப்பட்டிருந்த ஜீன்சை அணிந்திருந்த பெண்ணை சிவாவும் சைட் அடித்தப்படி தங்கள் எதிர்கால வாழ்க்கை எப்படி அமைத்துக் கொள்ள வேண்டும் என சீரியஸாக பேசிக் கொண்டிருந்தார்கள். எவ்வளவுதான் சைட் அடித்தாலும் ஒருவனுக்கு ஒருத்தி என்பதை கடைபிடித்தார்கள். ராகவன்: இன்னைக்கு காலைல எங்கப்பா என்ன சொன்னார்


காதல்

 

  முதல் காதல் கொடுத்த தோல்வியில் விரக்தி அடைந்து, விரக்தியின் உச்சத்தில் வெறித்தனமாக போராட, வாழ்க்கையில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துக் கொண்ட ராகவன், வாழ்க்கையை நம்பிக்கையுடன் எதிர் கொள்ள ஆரம்பித்திருந்தான். கிட்டத்தட்ட 7 வருடங்கள் வாழ்க்கையில் வீணாய் கழிந்திருந்தது. மீண்டும் அதே போன்றதொரு சூழ்நிலை, பழைய நியாபகங்களை கிளறிவிடும் விதமாக அந்த பெண் ராகவனை துரத்திக் கொண்டிருந்தாள். காதலிப்பதாக கூறினாள். இரண்டு முறை அறை வாங்கியும் அவளுக்கு உறைக்கவில்லை. அவள் தன் காதலை நிருபிக்க முயற்சி


ஆதலால் நான் சோம்பேறி

 

  அதிகாலை 5 மணிக்கு எனக்கு விழிப்பு வருகிறதென்றால் (நான் விரும்பாவிட்டாலும்) அதற்கு காரணம் அந்த சென்ட்வாசனைதான். நாசிக்குள் சென்று அடைத்துக் கொள்ளும், மூச்சு விட முடியாமல் விழித்துப் பார்த்தால். என் நண்பன் தனது உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரை இரண்டாவது முறையாக (சென்டில்) குளித்துக் கொண்டிருப்பான். காரணம் அவனது வேலை நேரம் காலை 6 – 3 சிப்ட். பி.பி.ஓ. பெரோட் சிஸ்டம், அம்பத்தூர். என்னைப்பற்றி கூறுவதானால், சூரியன் கிழக்கே உதிக்கும் என இரண்டாம் வகுப்பு பழத்துக்