கதையாசிரியர் தொகுப்பு: சூர்யா

91 கதைகள் கிடைத்துள்ளன.

இன்டர்வியூ

 

  விலை கொடுத்து உடல் பசியை தீர்த்துக் கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்ட 25 வயது இளைஞர்களில் நானும் ஒருவன். அந்த 4 இட்லியை எடுத்து வர இவ்வளவு நேரம் ஆகிறதென்றால், நான் 12 ரூபாய் கொடுத்ததற்கு என்ன அர்த்தம் இருக்கிறது. இந்த சர்வர்களுக்கு உடல் பசியை பற்றி தெரிவதே இல்லை, 12 ரூபாயின் அருமை இன்னும் வேலை கிடைக்காத எனக்கு தெரியுமா? இல்லை இவ்வளவு நேரத்தை அநாயசாமாக கடத்தும் அந்த சர்வருக்குத் தெரியுமா? நானே இரண்டு நாட்களுக்கு


ரூல்ஸ் சந்திரசேகர்

 

  ஊர் சுற்றுவது சம்மந்தமாக ஏதேனும் படிப்பிருந்தால் அதில் பி.ஹெச்.டி வாங்கியிருப்பான் சரவணன். இதில் கவனிக்கத் தகுந்த விஷயம் என்னவெனில், தான் எதற்காக அவ்வாறு சுற்றிக் கொண்டிருக்கிறோம் என்று அவனுக்கே தெரியவில்லை. நோக்கமற்ற செயல் அப்படி ஒன்றும் சாதாரண விஷயமல்ல. புதிய பதிய இடங்களையும், தெருக்களையும் வீடுகளையும், மரங்களையும் சுற்றிப் பார்த்தபடி சென்று கொண்டேயிருப்பான். அவ்வாறு செல்வதில் அப்படி ஒரு அலாதி விருப்பம். சுரவணின் தந்தை திரு. சந்திரசேகர் ஆர்மி ரிடையர்டு ஹவுல்தார். விறைப்பான மனிதர். தூங்கும்


குறுக்குப் புத்தி பிள்ளையார் ஒழிக

 

  தொலைக்காட்சியில் அந்த பழைய சினிமா ஓடிக்கொண்டிருந்தது. கடைசியாக இந்த ஒரு சினிமாவை மட்டும் பார்த்துவிட்டு ஆரம்பித்துவிட வேண்டியதுதான். இருந்தாலும் ஏதேனும் ஒரு புது சினிமா போட்டிருக்கலாம். திருவிளையாடலில் பிள்ளையார் முருகனை ஏமாற்றிக் கொண்டிருப்பதை எத்தனை முறைதான் பார்ப்பது. இருந்தாலும் என்னவொரு ஜுனியஸ் இந்த பிள்ளையார். இவர் தான் எனது முன்னுதாரணம். குறிப்பிட்ட தேவையான விஷயத்தை ஆழமாக நம்புவது குறித்த விஷயத்தில், ஏன்?, ஏதற்காக? என்ற கேள்விகள் இன்னமும் முழுமையாக அழியவில்லை என்னுள். காரணமில்லாமல் காரியமில்லை என்பது


பதவி உயர்வு

 

  24 மணி நேரமும் சுறுசுறுப்புடன் இயங்கக் கூடிய அந்த அலுவலகம் இயந்திர கதியில் இயங்கிக் கொண்டிருந்தது. வேலை செய்வதற்கென்றே பிறந்தவன் போல கம்யூட்டரும் பிரதீப்பும் ஒரு வித கடினமான பிணைப்போடு போராடிக் கொண்டிருந்தார்கள். பிரதீப் 26 வயது இளைஞன். அனுபவிக்க வேண்டிய வயதில் கடினமாக உழைத்தால் வாழ்க்கை இனிமையாக இருக்கும் என்று யாரோ சொல்லியதை வேதவாக்காக எடுத்துக்கொண்டு கடினமாக போராடிக்கொண்டிருந்தான். ஆனால் வாழ்க்கையில் இனிமைதான் இன்னும் வர வில்லை. ஆனால் பழக்கம் என்று ஒன்று இருக்கிறதே.


காயடிக்கப்பட்ட கோபங்கள்

 

  ‘டிக்கெட் எடுக்க காசில்லன்னா என்ன மயிருக்கு நீயெல்லாம் பஸ்சுல ஏர்ற, வக்கில்லன்னா நடந்து போக வேண்டியதுதான. நான் போற ரூட்டுலன்னு தேடிப்பிடிச்சு வருவிங்களாடா?. தினசரி உன்ன மாதிரி ஆட்களோட போராடுறதே என்னோட பொழப்பா போச்சு. உன்னையெல்லாம் பாத்தாலே தெரியுது. என்னைக்காவது ஏத்தாம போனா வக்கனையா திட்டமட்டும் தெரியுது………….. டேய் உனக்கெல்லாம் சொரனைன்னு ஒன்னு இருக்கா இல்லையாடா. சோத்ததான் திங்குறியா? இதே ரூட்ல ஏற்கனவே உன்ன ரெண்டு தடவ திட்டியிருக்கேன். கொஞ்சமாவது ரோஷமிருந்தா இப்டி திரும்ப செய்வியா?