கதையாசிரியர் தொகுப்பு: சூர்யா

91 கதைகள் கிடைத்துள்ளன.

இலக்கியச் சண்டை

 

  அவன் : மனதில் எழும் எண்ணங்களை மேகம் முகிழ்ந்து செல்வது போல இயல்பாக அலையவிட்டு இரு மேகங்கள் முட்டி மோதி முகிழ்த்து, புணர்ந்து, உயிர்ச்சாரை பொழியும் தருணத்தில் அதில் நனைந்து, தன்னை மறந்து ‘தான்’ ஐத் தொலைத்து, இவ்வண்டப் பிரபஞ்சத்தில் எங்கு தேடினும் கிடைக்காத ஓருயிராய், கைகளுக்கு மட்டும் உணர்வு கொடுத்து, சற்று உயிரும் கொடுத்து வார்த்தைகளை வார்தெடுக்க முடியுமானால் அதுவல்லவா எழுத்து……………….. இவன் : மச்சி சத்தியமா புரியலடா, என்னடா சொல்ற அவன் :


மாலை நேரக் கல்லூரி

 

  தனது இரு கைகளையும் பின்புறமாக கட்டிக் கொண்டு, அந்த கால வில்லன் நடிகர் வீரப்பாவைப் போல, முகத்தை விறைப்பாக வைத்துக் கொண்டு, வகுப்பிற்குள் நுழைந்த அவரை யாருமே மதிக்கவில்லை. தான் தான் இந்த வகுப்பின் ஆசிரியர் என்பதை உணர்த்துவதற்கு, காலம் காலமாக இந்திய ஆசிரியர்கள் பயன்படுத்தும் உடல்மொழியை சற்று மிகைப்படுத்தி நடித்துக் காட்டினாலும் மதிக்க மாட்டேன் என்கிறார்களே என உள்ளூர வருத்தப்பட்டாலும், உடலில் விறைப்பையும், முகத்தில் முறைப்பையும் சற்றும் குறைத்துக் கொள்ளக் கூடாது என்பதில் தீவிரமாக


99 அல்ல 100 சதவீத முழுத்தோல்வி

 

  ‘ஹலோ” ‘ஹலோ” ‘என்ன பண்ணிகிட்டு இருக்க” ‘தூங்கிகிட்டு இருக்கேன்” ‘காலை 10 மணிக்கு என்ன தூக்கம் வேண்டி கிடக்கு” ‘நைட் ட்யூட்டி பாத்துட்டு வந்தேன் அதான்” ‘ஓ நைட் ட்யூட்டி பாத்தா, காலைல தூங்கணுமா… உனக்கு வெக்கமா இல்ல” ‘இல்ல” ‘என்னை உன்னால சமாளிக்க முடியல்ல” ‘சரியா புரிஞ்சுகிட்ட, வெரிகுட்” ‘உன்னை இப்படித்தான் கல்யாணத்துக்குப் பின் டெய்லி டார்ச்சர் பண்ணுவேன்” ‘சரி அப்புறம் டார்ச்சர் பண்ணு இப்ப வை” உடனே கைபேசியை ஸ்விட்ச் ஆப் செய்தால்


முன்னறிவிப்பு

 

  மிரட்டலான பார்வையுடன் அவர் இப்படிக் கூறியிருந்தார். “வடை சுடுவதற்கு சட்டியில் எண்ணெய்யை ஊற்றினால் அது காய்வதற்கு முன்னதாக என் பொண்ணு என் வீட்டில் இருக்கணும், அப்படி ஒரு மாப்பிள்ளைதான் எனக்கு வேண்டும்” பெற்ற பெண்ணின் மீது மானாவாரியாக பாசம் வைத்திருக்கும் தந்தையை நினைக்கையில் பெருமிதமாகத்தான் இருந்தது. ஆனால் மற்றொரு புறம் யோசித்துப் பார்ககையில் இதுபோன்ற வசனங்களை பிரபல தமிழ் சினிமா வில்லன்கள் பேசி பார்த்தது போலவே இருக்கிறது. அவருக்கு மட்டும் மீசை இல்லை என்றால் அசல்


ஆத்ம நண்பன்

 

  சுந்தரேஷன் 10,570 ரூபாய் சம்பாதிக்கும் ஒரு பொறுப்பான குடும்பஸ்தன். மனைவி லதாவிற்கு அவர் மேல் மிகுந்த மரியாதை உண்டு. காரணம் மாதமானால் முதல் தேதியன்று 10,570 ரூபாயை அப்படியே மனைவியிடம் கொடுத்துவிட்டு 70 ரூபாயை கடன் வாங்கிச் செல்வார். அதில் 50 ரூபாயை மிச்சப்படுத்தி விடுவார். இவரை போன்ற சாதனையாளர்களைப் பற்றி உலகம் அறிவதேயில்லை. அந்த 20 ரூபாய்க்கு அப்படி என்ன செய்திருப்பார் என்றால், இப்படி ஒரு வழி இருப்பது யாருக்குமே தெரியாது, புளிப்பு மிட்டாய்