கதையாசிரியர் தொகுப்பு: சூர்யா

91 கதைகள் கிடைத்துள்ளன.

கொள்கை

 

  வாழ்க்கையில் ஏதேனும் ஒரு கொள்கையை மட்டும் சீரியசாக நான் கடைபிடிக்கத் தயார். அந்த கொள்கைக்காக என் உயிரையும் கொடுக்கத் தயார். அந்த கொள்கையை என் நாடி நரம்புகளில் எல்லாம் ரத்தமாக ஓடவிடத் தயார். நான் அந்தக் கொள்கையாகவே மாறத் தயார். ஆனால் அந்த கொள்கை என்னை வாழ்க்கையின் உச்சத்திற்கு கொண்டு போய்விட வேண்டும். ஏனெனில் வாழ்க்கையை இதற்கு மேல் குழப்பிக் கொள்ள முடியவில்லை. ஒன்றுமே புரியமாட்டேன் என்கிறது. அடுத்து என்னசெய்வது. என்ன செய்தால் சரியாக இருக்கும்.


தொலைக்‍காட்சி

 

  இருவர் மட்டும் அங்கிருந்த அனைத்துக் கட்டுக் காவல்களையும் பொருட்படுத்தாமல் அத்துமீறி தப்பிச் செல்ல துணிவுடன் முடிவெடுத்தனர். அவர்களால் பொருத்துக் கொள்ள முடியவில்லை. விஷயத்தை மதியம் வாக்கில் கேள்விப்பட்டு துடிதுடித்துக் கொண்டிருக்கிறார்கள். வெகுநேரமாக காத்துக்கொண்டிருக்கிறார்கள் ஜன்னல் கம்பிகளுக்கு அந்தப்பக்கமாக இருந்து கொண்டு. இவர்கள் விடுவதாகத் தெரியவில்லை. மணி அடித்தால் என்ன அடிக்காவிட்டால் என்ன தப்பிச் சென்றுவிட வேண்டியதுதான் என்கிற முடிவுக்கு வந்தார்கள் அந்த இருவரும். ஒரே கடினமான விஷயம் அந்த ஆளுயர சுவற்றை தாண்டிச்செல்ல வேண்டும். அதில்


திருமணத்துக்கு முன் – திருமணத்துக்குப் பின்

 

  தி.மு. : காதலி கடிதத்தில் உங்களை முதன் முதலில் பார்த்தபோது அது இளம் பச்சையா கரும் பச்சையா என்று தெரியவில்லை. எனக்கு எல்லாமே புதியதாகவும், இளமையானதாகவும், அதிகாலை பனித்துளியைப்போல் பிரெஷ்ஷாகவும், தெரிந்தது. என் கண்களை இமைக்க முடியாமல் போனதற்கு காரணம் கண்டுபிடிக்க முடியவில்லை. அப்பொழுது யாராவது என்னிடம் கேட்டிருந்தால் இமைகள் இமைப்பதற்காக படைக்கப்பட்டது என்று யார் கூறியது என்று சண்டைக்குப் போயிருப்பேன். இன்னமும் அந்த சட்டையை வைத்திருக்கிறீர்களா? உங்களை ஒரு முறை அந்த சட்டையுடன் பார்க்க


மேட் இன் இந்திய ஆண்கள்

 

  முகத்தில் அறைந்தாற்போன்று சொல்லிவிட்டு அவள் போய்க்கொண்டே இருந்தாள். திரும்பிப் பார்ப்பாள் என ஏக்கத்துடன் நான் அவள் சென்று கொண்டிருப்பதை பார்த்துக் கொண்டு நின்றிருப்பேன் என அவள் மனதுக்குள் வெகுளியாய் நினைத்துக் கொண்டிருக்கலாம். அவள் கோபமாக இதைச் சொல்லிவிட்டு சென்றிருந்தாள். ‘ஐ ஹேட் யூ. நாம ரெண்டுபேரும் நண்பர்களாகவே இருந்திருக்கலாம்” அவளுக்கு ஐ ஹேட் யு சொல்ல காரண காரியங்கள் எல்லாம் தேவையில்லை. பத்து நிமிட காலதாமதம் போதும். 9 மணிக்கு போன் செய்ய வேண்டிய நான்


திரு. திருடர்

 

  சத்தம் வராமல் ஓட்டின் மேல் ஏறி நடந்து செல்லும் கலையை அவன் பூனையிடமிருந்துதான் கற்றுக் கொண்டான். ஒவ்வொரு முறையும் பாதம் பதியும் வரை கவனம் வேண்டும். தனது வீட்டில் ஓடுகளை பரப்பி வைத்து அதன் மீது ஏறி நடந்து அவன் பயிற்சி செய்ததுண்டு. பல்வேறு இடைவிடாத முயற்சிகளுக்குப் பிறகு ஓடுகள் சடசடக்கும் சத்தம் அவனிடம் தோற்றுப் போனது. ஆனால் இன்று, இந்த ஓடு மிகப் பழைமையானதாக இருந்தது. ஒருவேளை தாத்தா சொத்து பேரனுக்குத்தான் என்கிற சட்டத்தின்