கதையாசிரியர் தொகுப்பு: சூர்யா

91 கதைகள் கிடைத்துள்ளன.

பாட்டில்களுக்‍கு பின்னால் உள்ள கதை

 

  1 தான் ஒரு 50 கிலோ தாஜ்மஹால் என்று ​சொல்லிக்‍ கொள்வதில் பெண்களுக்‍கு வேண்டுமென்றால் மகிழ்ச்சியும் பெருமை ஏற்படலாம். ஆனால் ஒரு ஆண் 50 கிலோ எடையுடன் காணப்பட்டால் பலநாள் பட்டினி கிடந்தவன் போல், எலும்புருக்‍கி நோய் வந்தவன் போல் பார்ப்பதற்கே பரிதாபமாக காட்சியளிப்பான். பெண்களுக்‍கும், ஆண்களுக்‍கும் உடல்வாக்‍கில் உள்ள வேறுபாடு இது. அதனால் கணேசுக்‍கு இந்த தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டதில் எந்த ஆச்சரியமும் இல்லை. அவன் ஏன் வேகமாக காற்றடித்தால் தெருவோரமாக ஒதுங்கி நின்று


ரயில் நிலையம்

 

  எல்லாவற்றிற்கும் என் நண்பன் தான் காரணம். நண்பன் என்றால் இப்படித்தான் இருக்‍க வேண்டும். மற்ற நண்பரக்‍ள் எல்லாம் இவனைப் பார்த்துக்‍ கற்றுக்‍ கொள்ள வேண்டும். நான் கேட்டவுடன் எனக்‍கு ரயிலில் டிக்‍கெட் புக்‍ செய்து கொடுக்‍க அவனால் எப்படி முடிந்தது என்று எனக்‍கே தெரியவில்லை. சொன்னவுடன் மறுக்‍காமல் செய்து கொடுத்தான். தக்‍கலில் டிக்‍கெட் புக்‍ செய்து கொடுக்‍குமாறு கேட்டேன். “அதெல்லாம் வேண்டாம் வீண் செலவு, வீக்‍ டேஸ் தானே, ஒன்றும் கூட்டம் இருக்‍காது” என்று கூறி


அடிமை சவாரி

 

  காசுபணம் இல்லாதவர்கள் வாழ்க்‍கையில், ஆண்-பெண் உறவில் இன்பம் என்பது எந்த அளவுக்‍கு அர்த்தப்பூர்வமாக இருக்‍கிறது என்கிற தாழ்வு மனப்பான்மை ஒவ்வொரு முறை உச்சநிலையை நெருங்குகிற போதும் அவனுக்‍குத் தோன்ற அப்படியே அடங்கிப் போகிறான். அவன் மனைவியின் முகத்தில் ஏமாற்றத்தைப் பார்ப்பது இது முதல் முறை இல்லை. எப்பொழுதாவது அரிதாகப் பூக்‍கும் சந்தோஷ நிகழ்வின்போது கூட மனம் ததும்ப சிரிக்‍க முடியாமல் அமைதியாக இருக்‍கச் செய்வது அவன் தினசரி சேகரித்து வைத்திருக்‍கும் அவமான எண்ணங்கள்தான். வாழ்நாள் முழுவதும்


அவன்

 

  பரிதாபகரமாக பார்க்‍கப்படும் ஒரு பார்வைக்‍குப்பின்னர் பயங்கரத்தை பார்ப்பது இதுவே முதல் முறை…. அவனை சிறு வயதில் பார்த்த போது அவன் கண்களில் பரிதாபகரமான சிறு ஒளி தெரிந்தது. என்மீது பரிதாபமே இல்லையா என்பது போல் ஒரு பார்வை பார்ப்பான். அந்தப்பக்‍கமும் இந்தப்பக்‍கமுமாக எதையோ தேடிக்‍கொண்டிருப்பான். அவனுக்‍கு நல்ல பசி இருந்தது போல. அவனது உடலில் இருந்த முடிகள் அனைத்தும் குத்திட்டு நின்று கொண்டிருக்‍கும். அவன் என் இனம் இல்லையென்றாலும் அவன் மீது எனக்‍கு பரிதாபம் ஏற்பட்டது.


அஜீத் – விஜய்

 

  தலய பத்தி தப்பா பேசுவியாடா” எனக்‍ கொடூரமாக கத்தியவாறு வீடு கட்டுவதற்காக வைத்திருந்த செங்கலை எடுத்து ஓங்கி மண்டையில் அடித்த போது, பழனி விஜய் (பழனியாண்டி விஜய்)யின் தலையில் நாட்டுக்‍கோழி முட்டையைப் போல் வீங்கிக்‍கொண்டு நின்றது. அதை தொட்டு தடவிப் பார்த்து அதன் அளவை யூகித்துப் பார்த்ததில் கடுமையான காயம் என்பதைத் தெரிந்து கொண்ட பழனி விஜய் பதில் தாக்‍குதலுக்‍கு தயாரானபோது, அஜீத் நடேசன் 100 கிலோ மீட்டர் வேகத்தில் சோழாவரம் பைக்‍ ரேசில் செல்வது