கதையாசிரியர் தொகுப்பு: சூர்யா

91 கதைகள் கிடைத்துள்ளன.

அவர் பெயர் அப்பா

 

  நான் எப்பொழுது வீட்டிற்கு நேரம் கழித்துச் சென்றாலும் அவர் இப்படித்தான் கேட்பார். “சினிமா எப்படி இருந்துச்சு” நான் ஒன்றும் சினிமாவுக்கெல்லாம் செல்லவில்லை. நான் கல்லூரியிலிருந்துதான் வருகிறேன். வரும் வழியில் அப்படியே நண்பனை பார்த்து விட்டு வருகிறேன். என்னை தயவு செய்து நம்புங்கள் என்று கண்ணில் தண்ணீர் வராமல் ஆனால் தண்ணீர் வருவதற்கு முன் உள்ள குழைவில் குரல் கரகரத்தபடி அவருக்கு பதில் அளிக்க வேண்டும் என அவர் எதிர்பார்ப்பது இந்த ஜென்மத்தில்நடக்கப் போவதில்லை. அவர் ஏன்


குடிகாரன்

 

  கட்டிய கணவனுக்கு உணவில்லை என்றால் ஜகத்தினை அழித்திடுவோம் என்று பாடுவதற்கு ஏன் எந்த கவிஞனுக்கும் மனது வரவில்லை. கட்டிய கணவனை வாய் நிறைய திட்டும் என் அருமை மனைவி சோற்றைப் போட்டுவிட்டு திட்டினால் என்னவாம். அவள் உடனடியாக என்னிடம் 3 சத்தியங்களை செய்து கொடுக்க வேண்டும். இல்லையென்றால் நான் மனிதனாக இருக்க மாட்டேன். 1. அவள் என்னை அடிக்‍கக் கூடாது. 2. அவள் என்னை அடிக்‍கக் கூடாது. 3. அவள் என்னை அடிக்‍கக் கூடாது. கர்த்தரின்


மனநல மருத்துவர்

 

  கழுத்தில் டையுடன் நீட்டாக உள்ளே வந்தவரைப் பார்த்தவுடன் சற்று மிரண்டு போனதற்கு காரணம், அந்த 28 வயது இளைஞர் இடுப்புக்‍கு கீழ் அணிந்திருந்தது அரைக்‍கால் டவுசர் மட்டுமே. அவரிடமிருந்து வார்த்தைகள் கோர்வையாக வெளிவரவில்லை. அவரது வார்த்தைகள் தெளிவற்று காணப்பட்டன. அதற்குக்‍ காரணம், அவர் அவரது கட்டை விரலை, வாய்க்‍குள்ளே வைத்து சூம்பிக்‍ கொண்டிருந்தார். என்னதான் ஏராளமான மன நோயாளிகளுக்‍கு மருத்துவம் செய்து குணப்படுத்தியிருந்தாலும், வாய்க்‍குள் பெருவிரலை வைத்து்க கொண்டு வித்தியாசமாக பேசும் அந்த இளைஞனின் வார்த்தைகளை


எக்‍ஸ் மேன்

 

  ‘சென்போன் ரிங்’ (கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது……) “ஹலோ” “வரதராஜன் சாரா” “ஆமா, நீங்க யாரு” “சார், நான் தான் உங்கள் வீட்டுல இருந்து 20 லட்சம் ரூபாயை திருடுனவன், நீங்க எவ்வளவு கவலையில இருப்பீங்கன்னு எனக்‍குத் தெரியும். நான் ஏன் திருடுனேன்னு ஒரு லெட்டர் எழுதி வச்சிருக்‍கேன். உங்க வீட்டு எல்.சி.டி. டி.வி.க்‍கு பின்னாடி அந்த லெட்டரை வச்சிருக்‍கேன். எடுத்து வாசிச்சுப் பாருங்க” ‘டொக்‍’ “டேய்,……டேய்,………….. டேய்…………யாருடா நீ…… டேய்………” வரதராஜன் கைகள்


மண்-மோகன்

 

  வாழ்வில் கடைபிடிக்‍க வேண்டிய பல்வேறு நல்ல குணங்களில் நிதானம் என்பது அரிதான ஒன்றாகவே இருக்‍கிறது. பலரிடம் இந்த குணம் இருப்பதற்கான அறிகுறியே இல்லை. நிதானம் என்பது அவ்வளவு கடினமான ஒரு விஷயமா? ஏன் பல நேரங்களில் நம்மை மீறி நிதானம் தவறி தவறான செயல்களில் ஈடுபட்டு விடுகிறோம் என்று ஆச்சரியப்பட்டுக் கொண்டிருக்‍கும் வேளையில், சில எதிரிடையான சம்பவங்களும் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்‍கின்றன. பூமியின் ஒரு பகுதி பனிமயமாகக் காணப்பட்டால், மற்றொரு பகுதியில் பாலைவனங்கள் நிறைந்துதானே காணப்படுகின்றன.