கதையாசிரியர் தொகுப்பு: சூர்யா

91 கதைகள் கிடைத்துள்ளன.

பேயுடன் பேச்சுவார்த்தை

 

  பயோ டேட்டா பெயர்; : அகிலேஷ் வகுப்பு : 6th “B ஸ்கூல் : சரஸ்வதி வித்யாலயா பிடித்தது : டி.வி., சாக்லேட், பிரைட் ரைஸ், எம்.ஜி.எம். வீடியோ கேம், தனுஷ்கா பிடிக்காதது : நிலா மிஸ், தன்ராஜ் சார், புளிக்குழம்பு, சாம்பார் ரைஸ், படிப்பு, ராஜேஸ் (கிளாஸ் லீடர்) லட்சியம் : ஜான் ஷீனாவையும, அண்டர் டேக்கரையும் அடித்து வீழ்த்துவது சிறப்புத் தகுதி : எனக்குப் பேய்னா பயமே கிடையாது. இன்று சன் டீ.வி.யில்


அதிகாரி

 

  நேற்று கனவில் ஆயிரக்கணக்கான தோழர்களிடையே திரு. சம்பத் சார் இவ்வாறு பேசிக் கொண்டிருந்தார். யாரும் கைத்தட்டவில்லை. அருகில் ஒரு பையன் சோடா பாட்டிலை வைத்துக் கொண்டு அவரது முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். பேச்சு அனல் பறந்தது. “அதிகாரிகளால் அதிகாரிகளுக்காக, அதிகாரிகளாக சேர்ந்து கண்டுபிடித்த விஷயம்தான் பஞ்சுவாலிட்டி. ஆனால் அந்த பஞ்சுவாலிடி அதிகாரிகளுக்கு மட்டும் இல்லை என்பதில் அந்த அதிகாரிகள் தெளிவாக இருப்பார்கள். அதிகாரத்தை ஒரு இடத்தில் நிலைநிறுத்துவதற்கு தன்னிலிருந்து மற்றவர்களை தாழ்த்தி பிரித்து வைப்பதற்கு, ஒரு


தி ரிவன்ச்

 

  ஆள்அரவமற்ற அந்த முட்டுச்சந்தில் பெரியவர் ஒருவர், தன் நெஞ்சில் கை வைத்துக்‍ கொண்டு வானத்தில் எதையோ பார்த்தபடி 3 சுற்று சுற்றி சுற்றினார். ஏதோ கருடனை பார்த்து பக்‍திப் பரவசத்தில் சுற்றுகிறாரோ என்று நினைத்து முடிப்பதற்குள் பொத்தென்று கீழே விழுந்தார். ஒரு பெரிய மனிதர் நெஞ்சு வலியால் துடித்தபடி கீழே விழுகிறார் என்பதை கூட உணர முடியாத மடையனாக மாறிவிட்டோமே என்பதை நினைத்துப் பார்க்‍கையில் என்னையே எனக்‍கு பிடிக்‍கவில்லை. பின் 150 சிசி பல்சர் வேகத்தில்


இட்லி

 

  பேசுகிறாள் பேசுகிறாள் பேசிக்கொண்டே இருக்கிறாள். காதுகள் என்று ஒன்று இருப்பதையும், அந்த காதுகளை ஒவ்வொரு மனித உயிரும் கேட்பதற்காகவும் பயன்படுத்துகின்றன என்பதையும் கிஞ்சித்தும் ஏற்றுக்கொள்ளாத அடம்பிடித்த ஜென்மம் அவள். செயற்கையாக தயாரிக்கப்பட்ட எந்த ஒரு பொருளும், உதாரணமாக ஒரு ஸ்விட்சை எடுத்துக் கொள்ளலாம். அந்த ஸ்விட்சை பத்தாயிரம் முறை உபயோகித்தால் அதன் ஆயட்காலம் முடிந்துவிடும் என்கிற ஒரு அளவுகோள் உள்ளது. அதன் தாங்கும் சக்தி அவ்வளவுதான். ஆனால் இந்த பெண்களின் வாய் மட்டும் வலிக்கவே வலிக்காதா?


மிரட்டல் கடிதம்

 

  எல்.கே.ஜி.யிலிருந்து யு.கே.ஜி. சென்ற நாள் முதல் எனக்கு (வினோத்) பெரிய தலைவலியாக இருந்தது. யு.கே.ஜி. என்னைப் பொறுத்தவரை அவ்வளவு ராசியாக இல்லை. அந்த இடஅமைப்பும், அதன் வாஸ்து அமைப்பும் எனக்கு அவ்வளவாக ஒத்துப் போகவில்லை. ஏதோ மூச்சு முட்டுவது போன்றதொரு மனநிலை. யாரோ கழுத்தை இறுக பிடித்து அமுக்குவது போன்று ஒரு கற்பனை. எல்.கே.ஜியிலிருந்து, யு.கே.ஜி. சென்றுவிட்டதாலேயே எனக்கு ஏதோ வாழ்வின் முக்கிய பொறுப்புகள் எல்லாம் தலைக்கு மேல் வந்து விட்டதாக இந்த ஆசிரியர்கள் கொடுக்கும்