கதையாசிரியர் தொகுப்பு: சூர்யா

91 கதைகள் கிடைத்துள்ளன.

நிறைவுக்காக

 

  பொதுவாக நமது நாட்டில் அனைவரும் நாளொன்றுக்கு ஒரு முறையாவது மூச்சு பயிற்சி செய்வதுண்டு. எப்பொழுது தெரியுமா? தெருவோர சாக்கடைகளை கடக்கும் பொழுது. அரிசிமாவில் கோலம் போடுவதின் மூலம் எறும்பு போன்ற ஜீவராசிகளுக்கு கூட உணவளித்து பாதுகாக்கும் நாம், பாக்டீரியாக்கள் போன்ற ஒரு செல் உயிரினங்களிடம் மட்டும் என்ன கோபமாகவா? நுடந்து கொள்ளப் போகிறோம். அவைகளுக்கும் வாழ்விடம் தந்து, அவைதரும் இம்சைகளையும் சகித்துக் கொண்டுதான் இருக்கிறோம் அங்கங்கு மூடப்படாமல் இருக்கும் இது போன்ற சாக்கடைகள் பரப்பும் மணம்,


நரகத்தில் சந்திப்போம்

 

  கூலிக்கு ஆட்களை கொலை செய்யும் இரண்டு நண்பர்கள் ஒருவனை கொலை செய்வதற்காக. பல மாடிகட்டிடத்தின் உச்சியில் படுத்திருந்தார்கள். இருவரும் ஒருவரையொருவர் வெகு சில தடவைகள் மட்டுமே சந்தித்து கொண்டனர். இப்படி என்றாவது ஒரு நாள் சந்தித்துக் கொண்டால் தான் உண்டு. அதிகாலையிலேயே வந்து படுத்து விட்டார்கள். சரியாக 10:00 மணிக்கு அந்த வழியாக செல்லும் காரில் உள்ள பெரிய மனிதரை சுட்டுக் கொள்ள வேண்டும். மணி 9:59. தூரத்தில் ஒரு கார் வந்து கொண்டிருந்தது. ஒருவனுடைய


நண்பர்கள்

 

  சார் வாட் டு யு வாண்ட் சார்” இரண்டு காபியை பேரரிடம் ஆர்டர் செய்து விட்டு மீண்டும் தனது சோகமான பார்வைக்கு பின்னே போய் ஒளிந்து கொண்டான் சிவா (சிவச்சந்திரன்). ஆதரவாக ஒரு நண்பன் இல்லையென்றால் சோகத்தை கடக்க வழியேது, எதிரே கார்த்திக் அமர்ந்திருந்தான், அந்த ரெஸ்டாரெண்ட் மாலை மங்கிய வேலையில் மெலிதாக இசையை கசியவிட்டுக் கொண்டிருந்தது. அவர்களின் ஆழமான சோகமான மௌனம் கலையும் முன் அவர்களைப்பற்றி சிறிது தெரிந்து கொள்வது அவசியம், கார்த்திக், சிவா,


துரோகம்

 

  இரவு மணி 10:30, இணையின் தேவை ஏற்படுத்திய இம்சையை சகித்துக் கொண்டிருந்தாள், சந்தியாவுக்கு திருமணமாகி 8 மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது. புதிதாக ருசி கண்ட பூனை. ஆனால் ராமு என்னும் ராமச்சந்திரனுக்கு அப்படியில்லை, பொதுவாக ஆணின் வேட்கைதான் அதிகமாக இருக்கும், சந்தியா கூட தனது கல்லூரி காலங்களில் தன் பின்னே சுற்றிய ஆண் பிள்ளைகளை பற்றி வெகுவாக அறிவாள், ஒவ்வொருத்தனும் ஒவ்வொரு விதமாக இருந்தான், அந்த கார்த்திக், உற்று பார்க்கும் கூர்மையான பார்வை, தன்பால் கவனத்தை


மனைவி

 

  காற்றை கிழித்துக் கொண்டு தன்னை நோக்கி பறந்து வந்து கொண்டிருந்த அந்த பொருளை பார்க்கும் பொழுது செத்தோம் என்று தான் நினைத்தான் சிவராமன். கிட்டத்தட்ட 2 வருட ப்ராக்டிஸ் என்றாலும் எல்லா முறையும் தப்பித்து விட முடியுமா என்ன? அப்பொருள் அருகே வந்த பொழுது தான் யூகிக்க முடிந்தது. அது மற்றைய நாட்களைப் போல் சாதாரண நெளியக்கூடிய பாத்திரம் அல்ல. வலிமையான தோசைக்கல் என்று. எதிர்பாராத தருணத்தில் காயத்திரியால் வீசப்பட்ட தோசைக்கல். வால் நட்சத்திரம் பூமியை