கதையாசிரியர் தொகுப்பு: சூர்யா
வதந்தீ
சிறுத்தை போன்று சிக்கென்று இருந்த அந்த கணேஷ் இன்று பெருத்து கருத்த குட்டியாக மாறியிருக்கிறான் என்றால் அதற்குக் காரணம் திருமணம் தான். அது ஏன் திருமணம் ஆனவுடன் சாப்பிடுவது தான் தங்களது பிரதான பணி என்பது போலவும், அலுவலகம் செல்வது, 8 மணி நேரம் வேலை செய்வது, குளிப்பது, பல்துலக்குவது மற்றும் இதர வேலைகள் அனைத்தும் துணை வேலைகள் என்பது போலவும் சாப்பிட ஆரம்பித்து விடுகிறார்கள் என்று புரியவில்லை. அன்று ஆரம்பித்து, “உங்களுக்கு சுகர், பி.பி. உள்ளிட்ட
கொக்கிகுமாரும், குண்டர்களும்
ரவுடிகளுக்கு பெயர் போன அந்த ஏரியாவில் ஒரு காலத்தில் இரவு 10 மணிக்கு மேல் யாரும் நடமாடுவதில்லை. அவ்வளவு பயங்கரமான ஏரியா என புகழ்பெற்றிருந்த அந்த பகுதியில் தற்போது குண்டர்களின் அட்டகாசம் தலைவிரித்தாடிக் கொண்டிருக்கிறது. அவர்களை தட்டிக்கேட்க ஆளில்லை என்கிற சூழ்நிலையே அங்கு நிலவி வருகிறது. இரவு 8 மணிக்கு மேல் பெண்கள் நடமாட்டத்தை அப்பகுதியில் காண முடியாது. இரவு 9 மணிக்கு மேல் ஆண்கள் நடமாட்டம் கூட சுத்தமாக இருக்காது. அந்த அளவுக்கு குண்டர்களின் அட்டகாச
தோற்றுப் போகக் கற்றுக் கொள்வோம்
வாரத்திற்கு 10 நாட்கள் சண்டையிட்டு நிம்மதியை கெடுக்க வேண்டும் என்பதுதான் அவளின் எண்ணம், லட்சியம், கொள்கை, கோட்பாடு, நியாயம், தர்மம், நீதிநெறி, நம்பிக்கை, எல்லாம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக வாரத்திற்கு 7 நாட்கள் மட்டுமே நிர்ணயிக்கப்பட்டு விட்டது. சண்டை என்று வந்துவிட்டால் “சிவகங்கைச் சீமையிலே படத்தில் வரும் எஸ்.எஸ்.ஆரைப் போல் பொங்கி குமுறுகிறாள். சுமார் 40 பக்க வசனங்களை மனப்பாடம் செய்யாமல் முன் தயாரிப்பின்றி, தங்குதடையின்றி சரளமாக மடைதிறந்த வெள்ளம்போல் கொட்டித் தீர்க்கின்றாள். அவள் ஆவேசமாக சண்டையிடுகையில் அவளது
ஷாப்புக் கடை
நார்த்தா குறிச்சியில் லைஃப்பாய் சோப்பு போட்டுக் குளித்துக் கொண்டிருந்தவர்கள், நந்திசேரியில் ரின் சோப்பு போட்டு குளித்துக்கொண்டிருந்தவர்கள் எல்லாம் இன்று லக்ஸ் சோப்பு போட்டு குளிக்கிறார்கள் என்றால் அதற்கு ஷாப்புக்கடை ஓனர் சேதுராஜன் தாத்தாதான் காரணம். ஆம் ஐஸ்வர்யாராய் தேய்த்துக்குளித்த அதே லக்ஸ் சோப்பு. அபிராமத்தில் உள்ள லக்ஸ் சோப்பு ஷாப்புக்கடை என்றால் சுத்துப்பட்டு கிராமங்களுக்கு எல்லாம் நன்கு பரிச்சயம். இராமநாதபுரம் மாவட்டம், கமுதிக்கு அருகில் அமைந்துள்ள ஷாப்புக்கடையின் புகழ் , இந்த அளவுக்கு மூலை முடுக்கெல்லாம் பரவியிருக்கிறது
பேருந்து நிலையம்
ஆனால் ஊருக்குள் புதிதாக நுழைபவர்களுக்கு ஊர்க்கட்டுப்பாடு மற்றும் விதிமுறைகள் எதுவும் தெரிவதே இல்லை. தான் தோன்றித் தனமாக ஊருக்குள் நுழையும் இவர்கள் சில விஷயங்களைப் பார்த்து, மனம் கொதித்த பின்னரே மாற்றமடைகிறார்கள். ஊர் பெரிய மனிதர்கள் ஊர் பழக்கவழக்கததை, கட்டுப்பாட்டை எவ்வளவுதான் எடுத்துக் கூறினாலும் அவர்கள் புரிந்து கொள்வதே இல்லை. கமுதி பேருந்து நிலையத்திற்குள் ஒருவன் வெள்ளை வேட்டி சட்டையை அணிந்து கொண்டு நுழைகிறான் என்றால் அவன் எவ்வளவு துணிச்சல் நிறைந்தவனாக இருக்க வேண்டும். நிச்சயமாக அவன்