கதையாசிரியர் தொகுப்பு: சூரிய கணேசன்

9 கதைகள் கிடைத்துள்ளன.

தேர்வறைத் தியானம்

 

  மூன்று மணி நேரம் தேர்வறையில் மௌனமாக இருக்கும்போது மனதில் பல்வேறு சிந்தனைகள் தோன்றும். பிரிந்த அன்பு, உடைந்த நட்பு, தோழியின் பரிவு, நண்பனின் நெருக்கம், தேர்வு சரியாக எழுதவில்லை என்றால்… எனும் பயம் இப்படி. இது பொதுவானவர்களுக்கு. இன்னும் சிலர் இருக்கிறார்கள், அவர்களுக்குக் கடவுள் பற்றிய ஆராய்ச்சி, பொதுவுடைமைச் சிந்தனை, கதை, கவிதை எழுதும் எழுச்சி, நாட்டில் சீர்திருத்தம் கொண்டு வருவது எப்படி என்றெல்லாம் இங்கே வந்துதான் ஞானோதயங்கள் (!) பிறக்கும். இப்படிப் பல்வேறு திசைகளுக்குக்


வெண்ணிற இரவுகள்

 

  கல்லூரியில் முதுகலை இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கிறேன், கிட்டதட்ட நான்கு ஆண்டுகள் பேருந்தில் தான் கல்லூரிக்குச் சென்று வருகிறேன். அதுவும் அரசு பேருந்தில் தான். தினமும் அதே கூட்ட நெரிசல், முதலில் பழக்கமில்லாத முகங்கள் , நாட்கள் செல்ல செல்ல அறிமுகமானது. முதலில் லேசான புன்னகையுடன் ஆரம்பித்த சிநேகம் போக போக நலம் விசாரிப்பது வரைக்கும் சென்றது. அரைமணி நேர பயணம், கூட்டம் அதிகமாக இருந்தால் எரிச்சலாகவும் கூட்டம் இல்லாத நாட்களில் வசதியாகவும் இருக்கும். நடத்துனரும்


ஒரு ராஜ விசுவாசியின் கதை

 

  காலம் கிபி.1300, சரியாக சொல்ல வேண்டும் என்றால் மூன்றாம் இராஜேந்திர சோழனுக்கு பிந்தைய காலம். வாசுகாறை என்னும் நாட்டை சுமவன் என்னும் அரசன் அறம் தவறாது ஆட்சி செய்து வந்தான்.சுமவன் மிக பெரும் சிவபக்தன், அதனால் நாட்டின் தென்பகுதியில் மிகப்பெரும் சிவாலயத்தை அமைக்கும் பணியில் ஈடு பட்டிருந்தான். நாட்டில் காலம் தவறாது மழை பொழிந்ததால் விவசாயமும் அதை சார்ந்த தொழில்களும் சிறப்பாக நடந்து வந்தன. நாட்டின் ஒரு பக்கம் கடல் நீர் பரப்பி இருந்ததால், வாசுகாறைக்கு


நீலத்தங்கமும் – காதலனும்

 

  எனது பைக் 98 கிலோமீட்டர் வேகத்தில் ஒடிக்கொண்டு இருக்கிறது என்று ஸ்பீடோ மீட்டர் காட்டியது. அது ஒரு முன்னிரவுப் பொழுது, ரம்யமான இருள் எங்கும் பரவிகிடந்தது. நான் என்.ஹெச்(தேசிய நெடுஞ்சாலை) 7 பயணித்துக் கொண்டு இருந்தேன், நான் இவ்வளவு வேகமாக செல்வதற்கு ஒரே ஒரு காரணம் என் தேவதை. இது போன்று வேகத்தில் நான் பலமுறை சென்றிருக்கிறேன். குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் ஒரு முறை விதனா உடன் சென்றிருக்கிறேன். அது வாழ்வின் சந்தோஷ தருணங்கள்.