கதையாசிரியர் தொகுப்பு: சு.கிருஷ்ணமூர்த்தி

15 கதைகள் கிடைத்துள்ளன.

எல்லைக்கோட்டின் எல்லை

 

  எழுதியவர்: ஆஷாபூர்ணா தேவி எல்லாரும் தோல்வியுற்றுத் திரும்பிவிட்டார்கள். கடைசியில் சதிநாத் தாமே இரண்டாம் மாடிக்கு ஏறி வந்து கடுமையான குரலில் சொன்னார், “சவி! அநாகரீகத்துக்கும் ஒரு எல்லை இருக்கு, எல்லை இருக்கணும்! ஆனா விருந்தாளிகள் கூடியிருக்கிற இந்தக் கல்யாண வீட்டிலே நீ செஞ்ச அநாகரீகத் துக்கு எல்லையில்லே! இவ்வளவு உறவுக்காரங்களுக்கு முன்னாலே என் கௌரவத்தை மண்ணாக்கினே, நீயும் கேலிக்கு ஆளாகிக் கிட்டே! இப்பவாவது தயவ செஞ்சு வா!” வீட்டுக்கு இரண்டாம் மாடி கட்ட அனுமதி கிடைக்க


மோசக்காரி

 

  எழுதியவர்: சுபோத் கோஷ் சநாதன், அவனுடைய பெண் சுதா. அப்பனுக்கு ஏற்ற பெண், பெண்ணுக்குத் தகுந்த அப்பன்! அவர்களுடைய குடும்பத்தில் துக்க நிகழ்ச்சிகள் நேரும். அப்போதெல்லாம் சநாதன் இடிந்துபோய் விம்மி விம்மி அழுவான். துன்பச் சுமையால் தலை நிமிர முடியாது பெண் ணுக்கு. அவள் முந்தானையால் கண்களை மூடிக்கொண்டு பொருமிப் பொருமி அழுவாள். அருகிலிருந்து பார்ப்பவர்கள் உணர்ச்சிவசப் படுவார்கள், கண்ணீர் விடுவார்கள், பெருமூச்சு விடுவார்கள். சநாதனுக்கு உலகத்தில் சுதாவைத்தவிர வேறு நாதியில்லை. அவளுக்குக் கல்யாணமானதும் அவளைப்


ஒரு காதல் கதை

 

  எழுதியவர்: நரேந்திரநாத் மித்ரா பிரபாத் பாபு ஜன்னல் வழியே எட்டிப் பார்த்து, “எழுதிக்கிட் டிருக்கீங்களா? சரி எழுதுங்க. நான் ஒங்களைத் தொந்தரவு பண்ணலே” என்று சொன்னார். நான் காகிதத்தையும் பேனாவையும் தள்ளி வைத்துவிட்டு என் மதிப்புக்குரிய, வயதில் பெரிய நண்பனை வரவேற்றவாறு, “வாங்க, வாங்க..! உள்ளே வாங்க!” என்று அழைத்தேன். பிரபாத் பாபு சற்றுத் தயக்கத்துடன், “நீங்க ஏதோ எழுதிக் கிட்டிருந்தீங்களே..!” என்றார். “எல்லா எழுத்தும் எழுத்தாயிருமா? சம்மா ரெண்டு மூணு கடிதங்களுக்குப் பதில் எழுதிக்கிட்டிருந்தேன்,


மதிப்புக்குரிய, விடைத்தாள் திருத்துபவர் அவர்களுக்கு

 

  எழுதியவர்: நாராயண் கங்கோபாத்தியாய் ஐயா, நீங்கள் இந்த விடைத்தாளைக் கடைசிவரை படிப்பீர்களா என்று எனக்குத் தெரியாது. ஏனென்றால் நான் விடைத்தாளில் ஒர கேள்விக்குக்கூடவிடையெழுதவில்லை. இந்தக் கடிதத்தை மட்டுமே எழுதியிருக்கிறேன். நீங்கள் ஒரு சில வரிகள் படித்ததுமே புருவத்தைச் சுளிப்பீர்கள், விடைத்தாளில் சைபர் போடுவீர்கள், பிறகு நான் அசட்டுத்தனமாகக் கடிதம் எழுதியதற்காகப் பல்கலைக் கழகத்துக்குப் புகார் செய்வீர்கள். நீங்கள் சைபர் போட்டாலும் புகார் செய்தாலும் எனக்குக் கவலையில்லை. நீங்கள் ஒருவேளை என் கடிதம் முழுவதையும் படித்தாலும் படிக்கலாம்


சிறியசொல்

 

  எழுதியவர்: சந்தோஷ்குமார் கோஷ் அது என் முதுகுக்குப் பின்னால் குனிந்து கொண்டு நின்றது. அதன் மூச்சுக் காற்று என் காதுகளைத் தொட்டது. என் கை விரல்லள் செயலிழந்து விட்டன. அது சொல்லியது – “ஏன் அனாவசியமாகப் பழைய காகிதக் குப்பையைக் கிளறித் தூசியைக் கிளப்பறே? சரசிஜ், ஒனக்கு அந்தக் கதை கிடைக்காது!” அதன் வாய் என் காதருகில். இயற்கைக்கு மாறான, கரகரப்புக்குரல்- பிசாசின் குரல்போல. தொண்டைக் குழாயில்ஓட்டையிருந்தால் குரல் இப்படித்தான் ஒலிக்கும். “எனக்கு அந்தக் கதை