Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

கதையாசிரியர் தொகுப்பு: சுரேஷ் பாபு

3 கதைகள் கிடைத்துள்ளன.

என் இனிய உலகம்

 

  கதை கருவாக்கம் : சிறில் அலெக்ஸ் கண் திறந்து பார்க்கையில் எல்லாமே புதிதாகத் தெரிந்தது எழுத்தாளருக்கு. கடந்த சில நாட்களாக பழக்கப்பட்டிருந்த அசெப்டிக் மருத்துவமனை வாடை சுத்தமாக விலகிவிட்டிருந்தது. சுலபமாக மூச்சுவிடமுடிந்தது. எல்லாம் சரியாகிவிட்டதா என்ன? நீல ஆடை மலையாள சேச்சிகளைக் காணோம். கையில் குத்தியிருந்த ஊசிமுனைகளைக் காணோம்.. எங்கே வந்திருக்கிறோம்? ஆனால் பார்த்த இடங்களாகத் தான் தோற்றமளித்தன எல்லாம். நாடக செட்டைப் போல கலந்து கட்டியான இடம். கொஞ்சம் பம்பாய் வீதிகள், கரோல்பாக் மூலை,


நம்பிக்கை

 

  சட்டைப்பையில் இருந்த செல்போன் முனகி நான் இருக்கிறேன் எனக் காட்டியது. எடுத்துப்பார்த்தால் பேட்டரி பவர் குறைவாம். இந்த சனியன் பிடித்த போனை முதலில் தலைமுழுக வேண்டும். அவனவன் கேமரா MP3 என ஜிகினா காண்பித்துக்கொண்டிருக்க என் கையில் மட்டும் ஆதிகால செல்போன். கருப்பு-வெள்ளையில் ஆறுமாதம் மட்டுமே ஓடும் பேட்டரி. பேசினால் ரெண்டு புள்ளி குறைந்துவிடும். இதில் மிஸ்டு கால் வேறு. ரம்யாதான். வேறு யார் எனக்கு மிஸ்டு கால் கொடுக்கப்போகிறார்கள்? சார்ஜரில் போனைச் சொருகி ரம்யாவை


தேர்தல் 2060

 

  வேலை முடிகிற வழியாய்த் தெரியவில்லை.வண்டி டெலிவரி எடுக்க எந்நேரமும் வந்துவிடுவான் – இன்னும் மூன்றாம் கியர் விழுவதில் பிரச்சினை. இரண்டு நாளாய் பிரச்சினையின் மூலாதாரத்தைப் பிடிக்க முடியவில்லை. கைப்பேசி சிணுங்கியது. இது வேறயா? கிரீஸும் எண்ணையும் வழிந்த கையுறையைக் கழட்டி போனை எடுத்தேன். குறுஞ்செய்திதான். “இன்று வாக்குப்பதிவு, இன்னும் 12 மணிநேரத்துக்குள்ளாக உங்கள் கடவுச்சொல்லைப்பயன்படுத்தி வாக்களியுங்கள். வாக்களிக்க வேண்டிய சாவடியின் வழியைப்பெற, இங்கே அழுத்துங்கள்” இங்கேவில் ஹைப்பர்லின்க் ஒளிர்ந்தது. பார்த்துக்கொண்டிருக்கும்போதே 12 மணி என்பது 11:59:59