கதையாசிரியர் தொகுப்பு: சுரேஷ் சுப்ரமணியம்

6 கதைகள் கிடைத்துள்ளன.

பொம்மலாட்டம்

 

  (பார்வையாளர்களின் கோணத்திலிருந்து பார்க்கையில், மேடையிலிருந்து இடது வலது ஆக ஒரு வீதியிருக்கும். இந்த வீதி மேடையில் சற்று பின்தள்ளி இருக்கும். வீதிக்கும் மேடை விளிம்பிற்குமிடையில் ஒரு “பள்ளம்” இருந்தாக வேண்டும். பார்வையாளர்களிற்கு இந்தப் பள்ளம் தெரியத் தேவையில்லை. பள்ளத்திற்கும், பார்வையாளர்களிற்குமிடையில் ஒரிரு செடிகளை புதர்மாதிரி வைக்கலாம். பார்வையாளர்களிற்குத் தெரிய வேண்டியது ஒரு கை மட்டுமே. உடம்பு பள்ளத்திற்குள் இருப்பது போலவும், கை வெளியே நீட்டிக் கொண்டிருப்பது போலவும் இருக்க வேண்டும்.) இருவர் பள்ளத்தின் விளிம்பில் நின்று


நான் பைத்தியம் இல்லை

 

  (இது முருகதாஸ் ராஜாராமன் என்றொரு இளம் வாலிபரின் சமீபத்திய அனுபவத்தையும், அதன் பின் விளைவுகளையும் விபரிக்கும் உண்மைக் கதை. முருகதாஸ் எம்மை மிகவும் விரும்பிக் கேட்டபடியாலும், அவருக்கு இலங்கைத் தமிழர்களான நாம் உதவ வேண்டும் என்ற நோக்கத்திலேயும்தான், அவருடைய கதையை இங்கு பிரசுரிக்கிறோம். இக்கதையை முருகதாஸ் எமக்கு சொன்னபடியே முடிந்தவரை எழுதியிருக்கிறோம். உங்களால் முடிந்த உதவியை இவருக்கு செய்யும்படி முருகதாஸின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம். நன்றி -ஆசிரியர் குழு.) அண்ணை எனக்கு சொந்த ஊர் உரும்பிராய்.


போலிகள்

 

  வு.ஏ. இல் நியூஸ் வாசிக்கிற பெட்டை அடிக்கடி, தேவையில்லாமல் பல்லைக் காட்டியது எனக்கு விசரேத்தியது. இவளவைக்கு ஏன் இநதத் தேவையில்லாத வேலை. நியூஸ் வாசிக்க வந்தால், நியூஸை வாசித்து விட்டுப் போறதுக்கு சும்மா போலித்தனமாக நடித்துக்கொண்டு… போலி நாய்கள்! எல்லாருமே போலிகள்! இண்டைக்கு எனக்கொரு பொன்னான நாளாய் அமையப்போகுது என்று ராத்திரி படுக்கேக்கை நினைத்துக் கொண்டனான். ஆனால், விடியக்காத்தாலை இந்தப் பெட்டை நாய் பல்லைக்காட்டி விசரேத்துது. இண்டைக்குத்தான் தேவகியை ஆறேழு மாதத்திற்குப் பிறகு பார்க்கப் போகிறேன்.


இரண்டு கோணங்கள்

 

  கோணம் சூ1 கிரிக்கெட் விளையாடுவதில், கவிதை எழுதுவதில் என்னுடைய திறமையை சில நேரங்களில் சந்தேகித்திருக்கிறேன். ஆனால் என்னுடைய புத்திசாலித்தனத்;தை என்றுமே நான் சந்தேகித்ததில்லை. ஹோனர்ஸோடு டிகிரி எடுத்து, படிப்பு முடிந்த கையுடன் நல்ல வேலை எடுத்து, இன்று, சிறந்த ஒரு எலெக்ட்ரிகல் இ;ஞ்சினீயராக, கை நிறைய சம்பளம் எடுக்கின்றேனென்றால், என்னுடைய புத்திசாலித்தனமே காரணம். நான் குள்;ளமாக, கொஞ்சம் குண்டாக இருப்பது கிரிக்கட்டில் வேண்டுமானால் எனக்கு கொஞ்சம் இடைஞ்சலாக இருக்கலாம், ஆனால் என்னுடன் செஸ்ஸோ, கார்ட்ஸோ விளையாடினால்


முகம்

 

  மாயவன் ஜங்-ப்ளோர் சந்தியில் உள்ள றோயல் பாங்கின் வாசற் படிகளில் இருந்து ஒவ்வொரு நிமிடமும் நூற்றுக் கணக்காணோர் அவசரமாக என்னைக் கடந்து செல்வதை பார்த்துக் கொண்டிருந்தேன். கூப்பிடு தூரத்தில் ஆயிரக்கணக்கானோர் இருந்தும், நான் மட்டுமே அங்கிருப்பது போல் ஒரு உணர்வு. முகம் தெரியாத சிலர் இன்னும் சில முகம் தெரியாதவர்களுடன் சிரித்துக் கதைத்துக் கொண்டு செல்ல, வேறு சிலர் தூரப் பார்வையுடன், யோசனைகளுடன் அவசரமாகச் செல்ல, நான் தற்காலிகமாக மறைந்து போனேனோ என்று சந்தேகமாயிருந்தது. வீடியோ