கதையாசிரியர் தொகுப்பு: சுமதி ரங்கநாதன்

1 கதை கிடைத்துள்ளன.

சுமைகள்

 

  குடிசை இருட் டில், அருகில் இருந்த நாடா விளக்கின் ஒளியை கூட்டி, கடிகாரத் தில் நேரம் பார்த்தாள் சரசு. மணி மூன்றை நெருங்கி கொண்டிருக்க, இன்னும் விடிய, இரண்டு மணி நேரத்திற்கு மேல் இருக்கிறதே…அவளுக்கு தூக்கம் வரவில்லை. அருகில் தலைமாடு, கால்மாடு தெரியாமல் தூங்கும் பிள்ளைகள் பரமனையும், தேவியை யும் பார்த்தாள். வள்ளியை அனுப்பி வைத்து, ஆறு மாதமிருக்குமா… பாவம் வீட்டில் வளர வேண்டியவளை, இப்படி வறுமைக்காக வேலைக்கு வெளியூருக்கு அனுப்பி வைத்து… வயசுக்கு வந்த