கதையாசிரியர் தொகுப்பு: சுப்ரா

9 கதைகள் கிடைத்துள்ளன.

பார்வை

 

  நகரத்திற்கே உரித்தான பரபரப்பு . மாலைச் சூரியனின் மரண அவஸ்தை . நான் போக வேண்டிய இடத்திற்கு பஸ் இன்னும் ஒருமணி நேரம் கழித்துத்தான் . என்னைப் பொறுத்த வரையில் ஒவ்வொரு நாளும் இப்படி பஸ் ஸ்டாப்பில் காத்திருக்கும் மாலை நேரம்தான் வாழ்வின் நிஜங்களைத் தரிசிக்கும் கணங்கள். காகிதங்களுடனும் , எண்களுடனும் அலுவலகத்தில் கழியும் ‘வயிற்றுக்காக ‘ நேரத்திற்கும் , காற்றில்லாத அறையின் அவலத்தில் ஸார்த்தரின் எழுத்துக்களோடு உறவாடும் ‘ மனதிற்காக ‘ நேரத்திற்கும் இடையில்


விதை

 

  நாலரை மணிக்கு கடைசி மணி அடித்தார்கள் . முத்துசாமி வேக வேகமாக புத்தகங்களை பைக்குள் திணித்துக் கொண்டு வெளியே வந்தான். வழக்கமாகவே பள்ளி முடிந்தவுடன் அடிக்கப்படும் கடைசி மணி அவனுக்கு சந்தோஷம் கொடுக்கும் . அன்று வழக்கத்தை விட அதிக சந்தோஷமாக இருந்தது . பள்ளியின் தேசிய சேவை இயக்கத்தில் அவன் உறுப்பினன் . ஒவ்வொரு வாரமும் ஐந்து பேர்களைத் தேர்ந்தெடுத்து , நகரத்தின் ஒரு பகுதியில் உள்ள டிராபிக் போலீஸ்காரரோடு நிற்க வைத்து ,


ஒரு மாலை நேரத்தில் என் மனம் அழுகின்றது

 

  ஒரு உஷ்ணமான ஆகஸ்ட் மாலை . நகரத்தை விட்டு அதிகமாக விலகிச் செல்லாமல் ஆனால் நகரத்தின் இரைச்சல்களில் இருந்து விடுபட்டு நிற்கும் அந்த டெர்மினஸில் ஒரு ஷெல்ட்டரின் கீழ் நான் நின்று கொண்டிருக்கிறேன் . பஸ்ஸிற்காக நின்று கொண்டிருக்கிறேன் என்ற வார்த்தைகளை என்னால் உபயோகிக்க முடியாது . ஐ அம் நாட் எ ஹிபோகிரைட் . நான் போக வேண்டிய இடத்திற்கு எந்த பஸ்ஸில் வேண்டுமானாலும் போகலாம். ஆனாலும் நான் வெகுநேரமாக நின்று கொண்டிருக்கிறேன் –


குடை

 

  ‘ கட்டக் …கடக்…கட்டக்…கடக்…’ கலவை மெஷின் சீராக ஒடிக்கொண்டிருந்தது . குடம் கவிழ்ந்து கலவை பொலபொலவென்று தரையில் கொட்டியது . “ முனுசாமி , ஜல்தியா அள்ளிவிடுப்பா . வானம் மூடுது . மழை வந்தாலும் வரும் . “ பொன்னுசாமி மேஸ்திரி குரல் பின்னால் கேட்டது . முனுசாமி குனிந்து கலவையை அள்ளி காத்திருந்த சட்டிகளில் கொட்டினான் . கொட்டிய கலவை அத்தனையையும் அள்ளி விட்டுவிட்டு நிமிர்ந்து வானம் பார்த்தான் . மழைக்கான அடையாளங்கள்