கதையாசிரியர் தொகுப்பு: சுபா

7 கதைகள் கிடைத்துள்ளன.

கூட்டத்தில் ஒருவன்!

 

  அந்த புதன்கிழமை வந்திருக்காவிட்டால், ரங்கா மற்றபடி ஒரு சாதாரணன். திருச்சியில் வேதியியல் படித்து, நேஷனல் கெமிக்கல் கம்பெனியின் ஆர் அண்ட் டி பிரிவில், டெல்லியிலும் மும்பையிலும் 25 வருடங்கள் குப்பை கொட்டிவிட்டு இரண்டு மாதங்களுக்கு முன்னர்தான் கொல்கத்தா வந்து சேர்ந்திருந்தான். காவிரிக் கரையில் வளர்ந்த மனைவி வேதவல்லி ‘ஆவோ… ஜாவோ’ என்று ஹிந்தியில் நான்கு வார்த்தைகளாவது கற்றுக்கொண்டாள். தொண்டைக் காற்று அதிகம் புரளும் பெங்காலி அவளை நான்கு சுவர்களைவிட்டு வெளியே கொண்டுவருவது இல்லை. மூத்தவன், கண்ணன்.


சுபா நிமிடக் கதைகள்!

 

  கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் ரொம்ப வருடங்கள் கழித்து நாக்பூர் சித்தப்பா வரப்போவதாக போன் செய்தார். அம்மாவிடம் சொன்னதும்,,, “அவரோட கொள்ளிக் கண் பட்டா துளசிச் செடியே பட்டுப்போயிடுமேடா! இதப் பாரு… குரோம்பேட்டையில வீடு கட்டியிருக்கேன்… பிரமோஷனுக்கப்புறம் 40,000 சம்பளம்னு எல்லாத்தையும் அவர்கிட்ட சொல்லிக்கிட்டு இருக்காதே!” என்று எச்சரித்தாள். ரயில்வே ஸ்டேஷனில்… ரயிலிலிருந்து எல்லாரும் இறங்கி விட்டிருந்தார்கள். சித்தப்பா மட்டும் இறங்காமல் உட்கார்ந்திருந்தார். என் குரல் கேட்டதும், என் கைகளை ஆசையுடன் பற்றினார். உடலெங்கும் தடவினார். “நல்லா