கதையாசிரியர் தொகுப்பு: சுபத்ரா

9 கதைகள் கிடைத்துள்ளன.

எல்லைக்கு அப்பால்

 

  ஒரு மந்தமான மதிய வேளை. உண்ட களைப்பில் வீட்டில் அனைவரும் உறங்கிக் கொண்டிருந்தனர். அது என்னவோ தெரியவில்லை எல்லோரும் விழித்திருக்கும் நேரங்களில் உறங்குவதற்கும் உறங்கும் நேரங்களில் விழித்திருந்து வித்தியாசப்படுவதற்கும் மிகவும் பிடித்திருந்தது. ஒரு வழியாக முழுவாண்டுத் தேர்வு முடிந்து விடுமுறையும் தொடங்கியிருந்தது. அடுத்தவருடம் நான்காம் வகுப்பு! உமா டீச்சரின் வகுப்புக்குப் போக வேண்டும். “ஏ பட்டு.. அங்க போவாத!” “அதைச் செய்யாத!” “அண்ணன் கூட சண்ட புடிக்காத!” “பள்ளிகூடம் போகனும் சீக்கிரம் எந்திரி!” போன்ற வசனங்கள்


குழப்பம்

 

  அப்படியே பைத்தியம் பிடித்துவிடும் போல இருக்கிறது. ஒருவேளை ஏற்கனவே பிடித்திருக்குமோ? ஆனால் யாரும் எதையும் சொல்லக் காணோமே! தலையைத் திருப்பிப் பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்த தரணி சாரைப் பார்த்தால் அவர் எப்போதும் போலப் புன்னகைத்துவிட்டு ‘என்ன’ என்பதுபோல் பார்த்தார். ‘ஒன்றுமில்லை’ எனத் தலையசைத்துவிட்டுத் திரும்பி வேலையைத் தொடர்ந்தேன். கொஞ்ச நாளாகவே இப்படித்தான் இருக்கிறது. அலுவலகத்தில் ஒரே குழப்பம். ஒரே இரைச்சல். ஒருமுறை அலுவலகத்திலிருந்தவாறே அம்மாவைத் தொலைபேசியில் அழைத்துப் பேசிக்கொண்டிருந்தபோது அவள் கேட்டது நினைவுக்கு வந்தது. “என்னடி


விலை

 

  “கீர்த்தி, என்னடி அமைதியாக இருக்க? உனக்கு இந்தப் புடவை ஓ.கே. தான? அமுதாவுக்கு இந்தப் பாசிப்பச்சைக் கலர் நல்ல சூட் ஆகும்னு நினைக்கிறேன்” கேட்டுக்கொண்டே வந்த வித்யாவையும் அவள் கையில் இருந்த புடவையையும் பார்த்தாள் கீர்த்தி. “நல்லா இருக்கு” அமைதியாக ஒரு புன்னகை. “ஏய்.. இவ எனக்கெல்லாம் செலக்ட் பண்ணித் தர மாட்டா.. அவ மட்டும் அழகா செலக்ட் பண்ணி ராணி மாதிரி டிரஸ் பண்ணிக்குவா” கோபித்துக் கொண்ட அமுதாவைச் சமாதானப் படுத்த முயன்றனர் மற்ற


நாமிருவர்

 

  “என்னங்க.. ஸ்கூல் வேன் வந்திருச்சா?” பதற்றத்துடன் கேட்டுக்கொண்டே சமையற்கட்டிலிருந்து விரைந்து வந்தவள் பதிலுக்குக் காத்திராமல் வாசலுக்கு ஓடினாள். அப்போதைய அசதியைப் போக்குவதற்கு எனக்கு ஒரு ஸ்ட்ராங் காபி தேவையாக இருந்தது. அட! மேஜையின் மீது வைக்கப்பட்டிருந்த தம்ளரை இப்போது தான் பார்க்கிறேன்! ஆறிப்போய்விட்டதோ என்று தொட்டுப் பார்த்துக்கொண்டு இருக்கும்போதே ஏமாற்றத்துடன் திரும்பிவந்தாள். “இன்னைக்கு லேட் ஆன மாதிரி தெரியல? எப்பவும் 4.20 மணிக்கெல்லாம் ஸ்கூல்விட்டு வந்திருவானே..!” மஞ்சள் பூசி முகம் கழுவித் தலைவாரிப் பூவைத்துப் பாண்ட்ஸ்