Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

கதையாசிரியர் தொகுப்பு: சுந்தரேசன் புருஷோத்தமன்

6 கதைகள் கிடைத்துள்ளன.

தீபாவலி

 

  சந்துதான் அது. நான்கிலிருந்து ஐந்தடிகள்வரைதான் அதன் அகலமிருக்கும். அதில்பாதியை, கொட்டிவைத்திருந்த சாமான்களும் ஆங்காங்கே காய்ந்துகொண்டிருக்கும் கொஞ்சம் விறகுகளும் அடைத்துக்கொண்டிருக்க, நாய்களும், பூனைகளும், சில குழந்தைகளும், மீதமிருந்த இடைவெளியில் நடந்தும், உட்கார்ந்தும், விளையாடிக்கொண்டுமிருந்தன. களிமண்குழைத்து எழுப்பின சுவர்களின்மீது மூங்கில் குச்சிகளை நிறுத்தி, மேலே பனையோலை வேய்ந்த சிறுகுடில்கள், சந்தின் இருமருங்கிலும் நெருக்கிக் கொண்டிருந்தன. அவையெல்லாம் தீபாவளியால் திருவிழாக்கோலம் பூண்டிருந்தன. குடிசைகளின் வாசல்கள் துப்புரவாக்கப்பட்டுத் தண்ணீர் தெளிக்கப்பட்டிருந்தன. காவியும் மாக்கோலமும் ஆங்காங்கே வரையப்பட்டிருந்தன. ஒலிபெருக்கியின் ஓயாத கூச்சலும், சிறுபிள்ளைகளின்


மனசு!

 

  நான், அம்மாவைப் பற்றி இதற்கு முன்னர் சிந்தித்ததாக நினைவில்லை. பால்ய வயதிலும் சரி. பருவ வயதிலும் சரி. அவளுடனான அளவளாவல்களில் அத்தனை ஆதுரமாய் பங்கு கொண்டதுமில்லை. “பசிக்குதும்மா” “என் சட்டைய எங்க வச்ச?” என நானும், “சாப்பாடு வச்சிருக்கேன் பாரு” “அலமாரியில் இருக்கே?” என அவளும் பேசியதாய், எனக்கும் அவளுக்கும் இடையில் இப்போதைய தொ.கா விளம்பரங்களில் வருவதைப் போலவே சில ஒற்றை வார்த்தை உரையாடல்கள்தான் நினைவறை வங்கிகளில் தென்படுகின்றன. உண்மையில், ஒரு விதிக்கப்படாத நிபந்தனையின் பராமரிப்பின்கீழ்,


வரந்தரும் தெய்வம்!

 

  “பண்போட அன்போட நலமோட வளமோட நூறு வருஷம் நீடூழி வாழணும்டா கண்ணா” தாத்தா பொக்கைவாய் சிரிக்க மலர்தூவி, பேரன் வருணை ஆசிர்வாதம் செய்தார். “தாத்தா! பூப்போட்டு ஆசிர்வாதம் பண்ணி எஸ்கேப் ஆகற டக்கால்ட்டி வேலைலாம் இங்க செல்லாது. அண்ணாக்கு வருஷா வருஷம் பர்த்டே கிஃப்ட் வாங்கித்தருவியே? இந்த வருஷம் எதும் இல்லியா..ம்ம்?!” நர்மதா தாத்தாவிடம் கேட்டுவிட்டுக் கண்சிமிட்டினாள். “யாருடி சொன்னா எதும் இல்லனு? இப்ப சொல்றேன் கேட்டுக்க…என் சொத்தே அவனுக்குத்தான். பத்திரம் எடுத்துட்டு வர சொல்லு


குப்பைத்தொட்டி’ல்’!

 

  வெளியுலகம் கண்களுக்குப் புலப்படாவண்ணம் புழுதித்துகள்களால் புடை சூழ்ந்த அந்த மகிழ்வுந்தின் பக்கவாட்டுக்கதவின் கண்ணாடியை பிஞ்சுக் கரமொன்று கவனமாய்த் துடைத்துத் தூய்மைப்படுத்த, பின்னதன் மறுபக்கம் வெளிப்பட்டது புன்னகைக்கும் சிறுவனின் பொன்முகம். ஆலமரத்தின் கிளைநுனிகள், கோணத்திற்கொன்றாய் திசையனைத்தும் வியாபித்திருப்பதைப் போன்று, சூரியனின் கிரணங்கள் கிஞ்சித்தும் பாகுபாடின்றி எண்திசையும் பாய்ந்தோடிப் பரவுதற்போன்று, அவன் பரட்டைத் தலைமயிர்க்கால்கள் முரட்டுத்தனமாய் அனைத்துப்பக்கமும் துளைத்துக் கொண்டிருந்தன. மெதுவாய் சிரிக்கும் அவன் விழிகளின் ஆழத்துள் நுரைத்துத் தளும்பின சோகத்தின் சுமைகள். பட்டினிப் போரால் துவண்டு, அதன்


அன்பின் வழியது….உயர்நிலை!

 

  காலையில் கண் விழித்ததும் நான் கண்ட காட்சியில் உண்டான என் ஆனந்தத்திற்கு அளவேயில்லை. சில தினங்களாய் நான் எதிர்ப்பார்த்துக் காத்திருந்த என் வெளி நாட்டுப் பயணத்திற்கான விசா, மேசையின் மேல் எனக்காக காத்திருந்ததுதான் அதற்குக் காரணம். நேற்று இரவே நிரஞ்சன் அதைப் பெற்றுக் கொண்டு வந்துவிட்டார் போலிருக்கிறது! ஆனால், ஏன் அதைச் சொல்லவில்லை?! ஏனென்றால், என் பயணத்தில் அவருக்குத் துளியளவும் விருப்பமில்லை. ஆனால், விருப்பமின்மை…என் பயணத்தின் மீது தானேயொழிய…..என் மீதல்ல காதலித்து, பின் கரம் பற்றிய