கதையாசிரியர் தொகுப்பு: சுதாராஜ்

57 கதைகள் கிடைத்துள்ளன.

மெய்ப்பொருள்

 

  லிஃப்ட் இல்லாத மாடிப்படிகளில் ஏறி மூன்றாவது தட்டுக்கு வந்து கோலிங் பெல்லை ஒலித்தபோது வழக்கம்போல அப்பாதான் கதவைத் திறந்தார். இதை அவளுக்காக மனமுவந்து செய்யும் ஒரு உதவிபோல, இதற்காகவே காத்துக்கொண்டிருப்பவர்போல பெல் ஒலித்த மாத்திரத்திலேயே கதவைத் திறந்து கண்களால் இரக்கமாகச் சிரித்துக்கொண்டு தோன்றுவார். அவருக்கு இதயத்திலிருந்து சுரந்து வரும் இந்த இரக்கத்தை தவிர வேறு எதையும் தரமுடியவில்லை. குடும்பத்தில் மூத்தவளாகப் பிறந்த இந்தப் பெண் நாற்பது வயதாகியும் இன்னும் ஒருத்தனுக்கு வாழ்க்கைப்படாமல் தன் குடும்பத்துக்காக உழைத்துப்


கனத்த நாள்

 

  மயிலண்ணையைக் காணவில்லை! இதிலேதான் படுத்திருந்தார்.. விறாந்தையில்! படுத்த பாய் விரித்தபடி கிடக்கிறது. ஆளைக் காணோம்! எங்கே போயிருப்பார்.. இந்த இரவு நேரத்தில்? விறாந்தையில் எனது படுக்கையிற் கிடந்தவாறே விழிகளாற் துளாவி முற்றத்தைப் பார்த்தேன். வெளியே இருளில் மறைந்து மறைந்து ஓர் உருவம் அசைவது போலத் தெரிகிறது. அங்கே என்ன செய்துகொண்டிருக்கிறார்.. மயிலண்ணை? நல்ல உன்னிப்பாகக் கவனித்தேன். அட, அது மயிலண்ணையில்லை – மரம்! மங்கலான நிலா வெளிச்சத்தில் காற்றில் அசையும் செடிகளின் நிழல்கள்.. யாரோ அசைவதைப்


விளக்கு

 

  சாப்பாட்டுக்கோப்பை மேஜையில் வைக்கப்பட்ட சத்தம் கேட்டுத் திரும்பிப் பார்த்தான். மனைவி குசினியை நோக்கிப் போய்க்கொண்டிருப்பது ‘இருளில்’ தெரிந்தது. மின்சாரம் இல்லாமற்போன பிரதேசத்தில் நெடுநாளாக இருந்த புண்ணியத்தில் இருளில் தெரியும் வல்லமையெல்லாம் வந்திருக்கிறதே என நினைத்தான். சத்தம் ஏற்படுத்தப்பட்டது அவனுக்காகத்தான். ‘சாப்பாடு வச்சிருக்கு…. வந்து சாப்பிடுங்கோ!’ எனச் சொல்வதற்குப் பதிலாகக் கையாளப்பட்ட உத்தி! அவன் சாப்பிடலாமா.. விடலாமா என்று யோசித்தான். சாப்பாடு இருட்டில் இருந்தது. அரிக்கன் லாம்பு வெளிச்சத்தில் படித்துக்கொண்டிருந்த பிள்ளைகள் அவனையும் சாப்பாட்டையும் மாறி மாறிப்


படுக்கை

 

  இனிப் படுக்கலாம் என நினைத்து, வாசித்துக் கொண்டிருந்த புத்தகத்தை மூடினான். கட்டிலில் தலையணையை நிமிர்த்தி வைத்து சாய்ந்து படுத்தவாறே வாசித்துக்கொண்டிருந்தவன் நேரம் கடந்துவிட்டபடியாற்றான் நித்திரை கொள்ளலாம் என நினைத்தான். பத்தரைமணி ஒரு பெரிய நேரமில்லைத்தான். ஆனால் இப்படியான குளிர்கால இரவுகளில் நித்திரை சரியாக வருமுன்னரே போர்த்து மூடிக்கொண்டு மெத்தைச் சூட்டில் கிடப்பது நல்ல சுகமாக இருக்கும். மேஜையில் எட்டி புத்தகத்தை வைத்தான். பின்னர் தலையணையைச் சரிசெய்துகொண்டு கையை நீட்டி ரேபிள் லாம்பை அணைத்தான். படுத்திருந்து வாசிப்பதற்கு


மீட்சி

 

  விடியாத காலையைப்போல பொழுது மப்பும் மந்தாரமுமாக இருந்தது. சூரியனின் சிரித்த முகத்தைக்கூட இன்னும் காணக்கிடைக்கவில்லை. மேகம் கறுத்து மூடிக்கொண்டது. மண்வெட்டியைத் தோளில் வைத்துப் பிடித்தவாறு தோட்டத்தை நோக்கி அவர் நடந்தார்., வெள்ளனத்துடனே கொத்தத் தொடங்கிவிட்டால் வெய்யிலுக்கு முதல் நியாயமான அளவு கொத்தி முடித்துவிடலாம். வானம் மப்புக் கட்டியிருப்பதும் ஒரு வழிக்கு நல்லது. வெய்யில் இல்லாவிட்டால் இன்று முழுவதும் நின்று தரையைக் கொத்தி முடித்துவிடலாம். ஒருவேளை மழை வந்து வேலையைக் குழப்பிவிடுமோ..? அண்ணாந்து மேகத்தைப் பார்த்தார்.. உம்மென்று