கதையாசிரியர் தொகுப்பு: சுஜாதா குரு

1 கதை கிடைத்துள்ளன.

உன் விரலை பிடித்து நடக்கும் நிமிடம் யாசிக்கிறேன்

 

  மின் விசிறி சத்தமில்லாமல் சுழன்று கொண்டிருந்தது. சிவராமன் நாற்காலியில் உட்கார்ந்திருந்தார். வெளிர் நீல நிறத்தில் வெள்ளையில் குறுக்குக் கோடுகள் போட்ட சட்டை அணிந்திருந்தார். எண்ணெய் வைத்த படிய வாரிய தலை. அவருக்கு முன்னால் செவ்வக வடிவில் பெரிய மேஜை . மேஜையின் இடது ஒரத்தில் ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த காகிதங்கள் காற்றில் லேசாய் பட படத்துக் கொண்டிருந்தது. வலது பக்கத்தில் ப்ரொளன் நிற முன் அட்டை போட்ட கனமான புத்தகம் ஒன்றும், அதன்