கதையாசிரியர் தொகுப்பு: சுகந்தி

11 கதைகள் கிடைத்துள்ளன.

சங்கரி!

 

 சமையலறை கதவின் மீது, சாய்ந்து உட்கார்ந்து கொண்டிருந்தாள் சங்கரி. அங்கிருந்து பார்த்தால் ஹால் நன்கு தெரியும். ஒரு நாற்காலியில், இரு கால்களையும் தூக்கி வைத்து உட்கார்ந்திருந்தார், அவள் கணவன் சபேசன். அவரெதிரே கை வைத்த ஒரு மர நாற்காலியில், சாய்ந்து உட்கார்ந்திருந்தார், அவர் நண்பர் குருசாமி. அன்று காலையில் தான், அவர்கள் வெளியூரிலிருந்து திரும்பியிருந்தனர். இருவரது முகத்திலும் சுரத்தில்லை. போன காரியம் வெற்றியடையவில்லை என்பதை, அவர்கள் முகமே காட்டிற்று. என்ன செய்வதென்று தெரியாமல், அவர்கள் மவுனமாக உட்கார்ந்திருந்தனர்.


சலனம்

 

 ஆபீசுக்கு புறப்பட்டுக் கொண்டிருந்தாள் சவுமியா. அவளைப் பார்த்தால், 20 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கிற பெண்ணைப் போலவே இருக்க மாட்டாள்; மிகவும் எளிமையாக இருப்பாள். நெற்றியில் கருப்பு சாந்து இட்டு, அதன் கீழ் நகமளவு விபூதி இட்டிருப்பாள். குளித்து விட்டு, டிபன் சாப்பிட டைனிங் டேபிளில் உட்கார்ந்திருக்கும் சவுமியாவிடம் இருந்து, நறுமணம் ஒன்று பரவியதை, அவள் அம்மா அம்புஜம் கவனித்தாள். சென்ட் அடித்துக் கொள்ளும் பழக்கமுள்ளவள் தான் சவும்யா; அதெல்லாம், இரண்டு ஆண்டுகளுக்கு முன் வரை. இப்போது, திடீரென்று


பூவும் நாரும்!

 

 “உள்ளே வரலாமா?’ என்ற குரல் கேட்டதும், ஹால் சோபாவில் உட்கார்ந்து, பேப்பர் படித்துக் கொண்டிருந்த கோபாலன், பேப்பரை தாழ்த்திப் பிடித்து, வந்திருப்பது யார் என்று பார்த்தார். நான்கு நாட்களுக்கு முன், அவர் மகள், அகிலாவை பெண் பார்த்து விட்டுச் சென்ற ராஜம் மாமி! அவசர அவசரமாக, பேப்பரை ட்ரேயின் மீது போட்டு எழுந்த கோபாலன், “”வாங்கம்மா… வாங்க… ஒரு வார்த்தை போன்ல சொல்லியிருந்தா, நானே ஓடி வந்திருப்பேனே,” என்று அவரை வரவேற்று, வீட்டின் உள்பக்கம் திரும்பி, “”மீனா…


கல்லும் புல்லும்!

 

 அறைக் கதவுக்கெதிரே கட்டில் போடப்பட்டு, கல்யாணி படுத்திருந்ததால், அவளால் அங்கிருந்தே ஹாலில் நடப்பதையெல்லாம் பார்க்க முடிந்தது. ஹாலின் நடுவே உட்கார்ந்து, காய்கறி நறுக்கிக் கொண்டிருந்தாள் நாராயணி. “”என்ன மாமி… பூசணிக்காய் சாம்பார், தக்காளி ரசம், கத்திரிக்காய் கறி செய்யட்டுமா?” என்று அங்கிருந்தபடியே கேட்டாள் நாராயணி. “”பண்ணுடியம்மா நாராயணி… நீ என்ன சமையல் செய்தாலும் எனக்கு பிடிக்கும். நீ ஒவ்வொண்ணையும் பார்த்து, பார்த்து ரொம்ப டேஸ்ட்டா பண்றே. ஒரு கையும், காலும் இழுத்துண்டு, படுத்த படுக்கையா இருக்கிற எனக்கு,


போதும் என்ற மனம்!

 

 தன் அறையில், புத்தகம் படித்துக் கொண்டிருந்தாள் சுமதி. மலர்களை பற்றி கூறும் அருமையான புத்தகம் அது. நிறைய பூக்களின் விவரங்கள், வண்ணப் படங்களில் அச்சடிக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு பூவும், ஒவ்வொரு விதம். எல்லாமே அழகு! சின்னக் குழந்தைகளைப் போல, காம்பின் நுனியில் சிரித்துக் கொண்டிருந்தன வண்ணப்பூச்சிகள். ஒவ்வொரு பூவையும், கண் இமைக்காமல், மனதுக்குள் ரசித்துக் கொண்டிருந்த போது, ஹாலில், “”வா பசுபதி…” என்று அப்பாவின் அழைப்பு குரல் கேட்டது. “”பசுபதி…” என்ற பெயரை கேட்டதும், சுமதியின் நெஞ்சு குதூகலித்தது.