கதையாசிரியர் தொகுப்பு: சி.முருகேஷ்பாபு

10 கதைகள் கிடைத்துள்ளன.

அட்டெண்டர்!

 

  “அட்டெண்டர்! இங்கே வா! இந்த ஃபைலை எல்லாம் கொண்டு போய் மேனேஜர் ரூம்ல வை!” என்று உரத்த குரலில் அழைத்தார் பரசுராமன். அந்த அலுவலகத்தின் ஹெட் கிளார்க். அவன் அதைச் செய்து முடித்ததும், “அட்டெண்டர்! பிரின்ட்டருக்கு டோனர் மாத்து!” என்று உத்தரவிட்டார். “சார்! அந்தப் பையன் கார்த்தி டிகிரி முடிச்சிருக்கான். வேற வாய்ப்பு இல்லாததால, தற்காலிகமா இங்கே அட்டெண்டரா வேலை பார்க்கிறான். அவனை வாய்க்கு வாய் அட்டெண்டர்னு கூப்பிடாம, அழகா பேர் சொல்லியே கூப்பிடலாமே?” என்றார்


மரியா கேன்ட்டீன்

 

  ‘‘ஒரு மரியா கேன்ட்டீன்…’’ என்று கேட்ட என்னைச் சின்ன சிரிப்போடு பார்த்தார் கண்டக்டர். ‘‘சேவியர்ஸா, இல்லை ஜான்ஸா?’’ ‘‘சேவியர்ஸ்… எய்ட்டி செவன் – நைன்ட்டி செட்!’’ என்றேன் பரவசமாக. ஏதோ அன்டார்டிகாவில் சொந்தக்காரனைப் பார்த்தது போல ஒரு சந்தோஷம். ஆனால், என் பதிலைக் கேட்க அவகாசமில்லாமல் இடித்து மிதித்துக்கொண்டு ஏறிய கும்பலை நோக்கி, ‘‘உள்ளே போங்க… உள்ளே போங்க…’’ என்று கத்தத் தொடங்கிவிட்டார். மரியா கேன்ட்டீன், திருநெல்வேலியில் அழிக்க முடியாத ஓர் அடையாளம். பாளையங்கோட்டை பஸ்


மூன்றாம் திருநாள்!

 

  ‘‘அவனை ஏன்டே கூட்டிட்டு வந்தீங்க… படிக்கிற புள்ளைக்கு இதெல்லாம் என்னத்துக்கு..?’’ என்னோடு வந்த முத்துக்குமாரையும் சுப்பிரமணியையும் கடிந்துகொண்டார் சித்தப்பா. எல்லோரும் திருநெல்வேலி பஸ் ஸ்டாண்டில் நின்றுகொண்டு இருந்தோம். எங்கள் ஊர் அம்மன் கோயிலில் கொடைவிழாவுக்கு காப்புக்கட்டி யிருந்தார்கள். ‘‘இந்த வருஷம் மூணு நாள் கொடை போட்டு அசத்திரணும்டே…’’ என்று நாட்டாண்மை தாத்தா சொன்னதற்கு, எல்லாரும் தலையாட்டிவிட்டார்கள். அதில் முதல் நாள் இளைஞர் சங்கத்துக்குக் கொடுத்துவிடுவது என்று தீர்மானம் ஆகியது. பெரியவர்களைத் தொடர்ந்து கூட்டம் போட்ட இளைஞர்கள்அந்த


கடைசி வீட்டு ஆச்சி!

 

  ‘‘கடைசி வீட்டு ஆச்சி செத்துப்போயிட்டா..!’’ பேச்சிமுத்துவின் குரல் எங்கோ கடலுக்குள் இருந்து ஒலிப்பது போல மெலிதாகக் கேட்டது. என்னால் செய்தியை உள்வாங்க முடியவில்லை. சில கணங்களில் செய்தி உறைத்த போது அதிர்ச்சியாக இருந்தது! ‘‘எப்படியும் நாளைக்குச் சாயங் காலம் ஆகிடும் தூக்குறதுக்கு. நீ வந்துடுவியா?’’ என்றான். உடைந்த அவனுடைய குரலில் இருந்து எவ்வளவு நேரம் அழுதிருப்பான் என்று யூகிக்க முடிந்தது. ‘‘என்னடா கேக்கறே, உடனே வர்றேண்டா! டேய், கொஞ்சம் முன்னப்பின்ன ஆனாலும் தூக்கிற வேண்டாம்னு சொல்லுடா.


ராமசாமியும் ரொமானே ஹொசாரிகாவும்..!

 

  யாருக்கும் பயனில்லாமல் கொட்டிக்கொண்டு இருந்தது குற்றால அருவி. ராமசாமியும் ரொமானே ஹொசாரிகாவும் சாரல் தெறிக்கும் தூரத்தில் நின்று அருவியைப் பார்த்துக்கொண்டு இருந்தார்கள். இருளில் அடையாளம் தெரிய வேண்டும் என்பதற்காகவும் குளிரைத் தாங்க வேண்டும் என்பதற்காகவும் கரிய நிற ராமசாமி காதை மறைத்து வெள்ளைத் துண்டைச் சுற்றியிருந்தான். ரொமானே தன்னுடைய துப்பட்டா வால் தலையை மூடியிருந்தாள். கைகளுக்குள் பொத்திய விளக்கு போல அந்த இருட்டிலும் ரொமானேவின் முகம் பளீரென்று ஜொலித்தது. குளிரின் மிகுதியால் ராமசாமிக்கு நெருக்கமாக வந்து