கதையாசிரியர் தொகுப்பு: சி.இராமச்சந்திரன்

8 கதைகள் கிடைத்துள்ளன.

மதுக்கடை

 

 முருகானந்தத்தால் ராஜசேகரன் சொன்னதை நம்பவே முடியவில்லை. நம்பாமலும் இருக்க முடியவில்லை. அவர்கள் இருவரும் வரிந்துகட்டிக்கொண்டு நேராக ஊருக்கு வெளியே இருக்கும் அந்தக் கடையை நோக்கி நடக்கத் தொடங்கினார்கள். அவர்களோடு ராமலிங்கம், குப்புசாமி, மகாதேவன், மனோகரன் என்று பலபேர் வந்து கலந்துகொண்டார்கள். முருகானந்தமும் ராஜசேரனும் இவர்களின் வருகையை சந்தேகத்தோடு பார்க்க, ‘எங்களுக்கும் உங்க நெலமதான்… வாங்க சேந்தே போவோம்’ என்றான் குப்புசாமி. எல்லோருடைய கண்களிலும் ஒரு பதட்டமும் பயமும் தெரிந்தது. யாரும் யாரோடவும் பேசிக்கொள்ளாமல் மெளனமாய் நடந்துகொண்டிருந்தார்கள். அந்த


மனசு

 

 கவின், அவன் தாத்தா வீட்டிற்கு வந்து இன்றோடு ஒரு மாதம் முடிவடைகிறது. இன்னும் இரண்டு தினங்களில் அவன் பள்ளிக்குப் போக வேண்டும். அதனால் சென்னையிலிருந்து வந்த அவன் அப்பா அவனை அழைத்துக்கொண்டு போவதற்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்தார். அந்தக் கிராமத்தில் ஒரு மாதம் எப்படி ஓடியது என்றே கவினால் உணரமுடியவில்லை. கண்ணை மூடித் திறப்பதற்குள் என்பார்களே! அப்படி ஓடிவிட்டன முப்பது நாட்கள். கவினின் தாத்தாவும் பாட்டியும்தான் பாவம். அவர்கள் இன்னும் இரண்டு மாதம் பள்ளிக்கூடத்துக்கு விடுமுறை விட்டிருக்கக் கூடாதா


ஓர் இரவுப்பொழுதில்

 

 அவனுக்கு அந்தப் பேருந்து நிலையம் புதிதல்ல. ஆனால், அவளுக்கு அந்தப்பேருந்து நிலையம் புதிது. அவள் அப்பேருந்து நிலைய நிழற்குடை ஒன்றில் உட்கார்ந்துகொண்டிருந்தாள். அவனும் அவளுக்கு எதிர்த்தார்போல் இருந்த நிழற்குடையில் அமர்ந்துகொண்டிருந்தான். அவன் பேருந்தின் வருகைக்காக காத்திருந்தான். அவள் அதற்காக காத்திருக்கவில்லை என்று அவனுக்குத் தோன்றியது. கூடவே ஏதோ ஒரு பதற்றம் அவள் முகத்தில் தெரிந்தது. பேருந்தின் வருகையைக் கவனித்துக்கொண்டே அவளையும் இடையிடையே பார்த்துக்கொண்டிருந்தான் அவன். அவளும் அப்படித்தான் அவனை அடிக்கடி பார்த்துக்கொண்டாள். தன் கைக்கடிகாரத்தைப் பார்த்தான் அவன்.


ஓடிப்போனவள்

 

 தன் பேரப்பிள்ளையைப் பார்த்த மகிழ்ச்சியில் ரத்தினத்திற்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. அவளுக்குக் கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை. இந்தக் காலைப்பொழுதில் இப்படி ஒரு இன்ப அதிர்ச்சியை அவள் எதிர்ப்பார்க்கவில்லை. வீடு தெரியாமல் தவித்துக்கொண்டிருந்தவனைத் தன் வீடுவரை அழைத்துவந்து விட்டுவிட்டுச் சென்ற கலாவை கையெடுத்துக் கும்பிட்டாள் இரத்தினம். கும்பிட்டக் கையோடு தன் பேரப்பிள்ளையின் இரண்டு கைகளையும் இறுக்கப் பிடித்துத் தன் கண்களில் ஒத்திக்கொண்டாள். இரண்டு கைகளுக்கும் மாற்றி மாற்றி வெற்றிலைப் பாக்கு போட்டு சிவந்த தன் வாயால் முத்தம்


விவாகரத்து

 

 எப்போது விடியும் விடியுமென்று காத்துக்கிடந்த நதினிக்கு இரவெல்லாம் தூக்கமே வரவில்லை. தூங்குவதற்கும் அவள் மனம் சம்மதிக்கவில்லை. சற்று கண்ணசரலாம் என்று இமையை எப்படியாவது கஸ்டப்பட்டு மூடினாலும் அவைகள் சிறகை விரித்துப் பறக்கும் பறவைபோல் திறந்துகொள்கின்றன. அந்த சிறிய அறைக்குள் நடந்து பார்த்தாள். மீண்டும் பெட்டின்மீது வந்து அமர்ந்து பார்த்தாள். சற்றுநேரம் கழித்து ஜென்னல் கதவைத் திறந்துகொண்டு வெளியே எட்டிப் பார்த்தாள். இதற்கிடையில் பத்து நிமிடத்திற்கு ஒருமுறை கடிகாரத்தையும் பார்த்துக்கொண்டாள். இவள் பதட்டத்தைப் புரிந்துகொள்ளாத அந்தக் கடிகாரம் இயல்பாகத்

Sirukathaigal

FREE
VIEW