கதையாசிரியர் தொகுப்பு: சாவி

15 கதைகள் கிடைத்துள்ளன.

வடம் பிடிக்க வாங்க ஜப்பானுக்கு!

 

 அத்தியாயம்-7 | அத்தியாயம்-8 புள்ளி சுப்புடு பரம திருப்தியோடு ஏப்பம் விட்டுச் கொண்டு வந்தார். 1 “அரண்மனை சாப்பாடு ரொம்ப பலம்போல இருக்கு!” என்றார் மனோரமா. “ஆமாம்; மனுஷனுக்குச் சாப்பாட்ல கிடைக்கிற திருப்தி வேற எதுலயும் கிடைக்காது. எடைக்கு எடை பொன்னை அள்ளிக்” கொடுங்க. போதும்னு சொல்லமாட்டான். மண்ணை அளந்து கொடுங்க–அதிலும் திருப்தி ஏற்படாது. சாப்பாடு ஒண்ணுலதான் திருப்தி ஏற்படும். ‘போதும் போதும். வயிறு நிரம்பிட்டுது. இனி வேண்டாம்’ என்பான். நம்பூதிரி கதை தெரியுமா உங்களுக்கு?” என்று


கலியுகக் கர்ணன்

 

 தேவர்களும் அசுரர்களும், முனிவர்களும் பெண்ணா சைக்கு ஆளாகி யிருக்கும்போது, கேவலம் நமது பால கோபால் மட்டும் அந்த ஆசையிலிருந்து தப்ப முடியுமா? ஒரு நாள் அவர் வினிமாவுக்குப் போய் விட்டு வந்தார். படம் முடிந்து வெளியே வந்தபோது ஒரு பிச்சைக்காரன் அவரைப் பார்த்துக் கையை நீட்டினான். பாலகோபால் அவனை லட்சி யம் செய்ய வில்லை. வெகு அலட்சியமாகத் தன்னுடைய கார் நிறுத்தப்பட்டிருந்த இடத்தை நோக்கி நடந்தார். அதே சமயத்தில் பெண்கள் வகுப்பிலிருந்து வெளியே வந்து கொண்டிருந்த சித்ரலேகை


வடம் பிடிக்க வாங்க ஜப்பானுக்கு!

 

 அத்தியாயம்-6 | அத்தியாயம்-7 | அத்தியாயம்-8 கொடியேற்று விழா நிகழ்ச்சிக்கு காலை . ஒன்பது மணிக்கு நேரம் குறிப்பிட்டிருந்ததால் விழாவேந்தன் இரவெல்லாம் கண்விழித்து அரண்மனை கிழக்கு வாசலில் பெரிய மாநாடுபோல் ஷாமியானா போட்டு, ‘இகபானா’ அலங்காரங்களுடன் மேடை அமைத்திருந்தார். சக்ரவர்த்தி குடும்பத்தார், ஜப்பான் நாட்டுப் பிரதமர், டோக்கியோ நகர மேயர், பார்லிமெண்ட் அங்கத்தினர்கள், அதிகாரிகள், தொழிலதிபர்கள், வி.ஐ.பிக்கள், வெளிநாட்டு விருந்தாளிகள் அத்தனை பேரும் அவரவர்கள் இடத்தில் அமர, சக்ரவர்த்தியின் காரியதரிசி – யோஷினாரியும் விழாவேந்தன் முத்துவும் “ஆச்சா,


வடம் பிடிக்க வாங்க ஜப்பானுக்கு!

 

 அத்தியாயம்-5 | அத்தியாயம்-6 “காமத்துப்பாலில் ஒரு சுவாரசியமான குறளைச் சொல்லி அதுக்கு அர்த்தம் சொல்ல முடியுமா?” – திருக்குறள் ஷோஜோவிடம் கேட்டார் புள்ளி. “வெல்லப் பிள்ளையாரில் எல்லாப் பக்கமும்தான் இனிக்கும். அதுபோல எல்லாக் குறளுமே சுவாரசியம் தான். ஒரு குறள் சொல்றேன், கேளுங்க.” தாம்வீழ்வார் மென்தோள் துயிலின் இனிதுகொல் தாமரைக் கண்ணான் உலகு. “இதுக்கு என்ன அர்த்தங்க?”-புள்ளி கேட்டார். “தாம் காதலிக்கின்ற பெண்ணின் மிருதுவான தோள்களைத் தழுவிக்கொண்டு படுத்திருப்பதை விடத் தாமரைக் கண்ணனாகிய திருமால் உலகம் இன்பமுள்ளதா


வசூலான வாடகை

 

  “இரண்டு பெரிய அறைகள், ஒரு கூடம் இந்தத் தாழ்வாரத்திலும் பாதியை நீங்கள் உபயோகித்துக் கொள்ளலாம். வாடகை பன்னிரண்டு ரூபாயாகிறது. இந்தத் தெருவில் இவ்வளவு மலிவாக வேறு எங்குமே இடம் கிடைக்காது” என்று சபாபதி அய்யர் வருபவர்களிடம் சொல்லிச் சொல்லிப் பாடமாய்ப் போன மேற்படி வார்த்தைகளை அன்று புதிதாக வீடு பார்க்க வந்தவரிடமும் ஒப்பித்தார். “ஒஹோ ! இந்தச் சமையலறையில் புகை போகாது போலிருக்கே? ரேழி அறையில் வெளிச்சத்தைக் காணாமே? காற்றும் வராதோ? கொடி கட்டுவதற்கு வசதி


வடம் பிடிக்க வாங்க ஜப்பானுக்கு!

 

 அத்தியாயம்-4 | அத்தியாயம்-5 “நாலு வீதிக்கும் பேர் வச்சிட்டாப் போதுமா? அங்கெல்லாம் தேர் சுத்தி வரவேணாமா? டர்னிங்ல தேரைத் திருப்பி விடணுமே; அதுக்கெல்லாம் என்ன ஐடியா வச்சிருக்கீங்க?” என்று விழா வேந்தன் முத்து கேட்க, “ஜப்பான்ல புல்லட் ரயில்களையே ரிமோட் கண்ட்ரோல்ல ஓட்றாங்க. தேரைத் திருப்பி விடறதுதானா பிரமாதம்!” என்றார் புள்ளி சுப்புடு. “தேரோட்டத்தை நம் ஊர்ல எப்படி நடத்தறாங்களோ அந்த மாதிரியேதான் இங்கேயும் நடத்தணும். தெரு முனையில் திருப்பறது கூட நம் ஊர் வழக்கப்படிதான் செய்யணும்.


வடம் பிடிக்க வாங்க ஜப்பானுக்கு!

 

 அத்தியாயம்-3 | அத்தியாயம்-4 | அத்தியாயம்-5 நரீடா விமான கூடம் ‘ஜே ஜே’ என்று பரபரத்தது. இன்னும் சிறிது நேரத்தில் ஏர் இண்டியாவில் வந்து இறங்கப் போகும் இந்தியன் வங்கி சேர்மன் கோபாலகிருஷ்ணனை வரவேற்று, அரண்மனைக்கு அழைத்துச் செல்ல ஜப்பான் சக்ரவர்த்தி தமது அந்தரங்கக் காரியதரிசி மிஸ்டர் யோஷினாரி யையும், அவருக்குத் துணையாக விழா வேந்தன் முத்து, புள்ளி சுப்புடு இருவரையும் விமான கூடத்துக்கு அனுப்பி வைத்திருந்தார். காரியதரிசி முன் ஸீட்டிலும் இவர்கள் பின் ஸீட்டிலும் உட்கார


வடம் பிடிக்க வாங்க ஜப்பானுக்கு!

 

 அத்தியாயம்-2 | அத்தியாயம்-3 | அத்தியாயம்-4 ஒன்று, இரண்டு என்று தொடங்கி ஐந்து வரை விரல் விட்டு எண்ணினார் புள்ளி சுப்புடு. அப்படி எண்ணும்போது நம் ஊர் வழக்கப்படி இல்லாமல், கட்டை விரலில் தொடங்கி சண்டுவிரலில் முடித்தார். “இதென்னய்யா தலைகீழ்ப்பாடமா கட்டை விரல்லேருந்து எண்றீங்க! இது எந்த ஊர் வழக்கம்?” என்று கேட்டார் முத்து. “இது ஜப்பான் நாட்டு வழக்கம். நாமெல்லாம் சுண்டு விரல்லே ஆரம்பிச்சு கட்டை விரல்லே முடிப்போம். இங்கே கட்டைவிரல் தான் முதல் நம்பர்


வடம் பிடிக்க வாங்க ஜப்பானுக்கு!

 

 அத்தியாயம்-1 | அத்தியாயம்-2 | அத்தியாயம்-3 “பாரிஸ் ஜஃபல் டவரைவிட இது உயரமா?”-முத்து கேட்டார். “ஆமாம். ஆனா, அது வெய்ட் அதிகம். 7000 டன் கனம். இது 4000 டன்தான்”- புள்ளி சொன்னர்ர். “அதாவது-இது கனம், அது மகாகனம்” என்றார் முத்து. “ஜப்பான்ல அடிக்கடி புயலும் பூகம்பமும் வருமே அதுக்கெல்லாம் தாக்குபிடிச்சு நிக்குதர இது?”-கணபதி ஸ்தபதி கேட்டார். “அந்த விஷயத்துல நம்ம கலைஞர் மாதிரிதான் இந்த ட வரும். எந்தப் புயலுக்கும் பூகம்பத்துக்கும் அசைஞ்சு கொடுத்து ஸ்டெடியா


வடம் பிடிக்க வாங்க ஜப்பானுக்கு!

 

 (இந்த நவீனத்தில் வரும் ‘ நிஜப் பெயர்களுடன் – கற்பனைப் பெயர்களும் கலந்திருக்கின்றன.) டோக்கியோவில் நடைபெறப்போகும் தேரோட்ட விழா ஏற்பாடுகளை கவனிக்கச் சென்றுள்ள முதல் குழுவில் திரு கணபதி. ஸ்தபதி, திருமதி மானோரமா, வீழா வேந்தன் முத்து, புலவர் நன்னன், புள்ளி சுப்புடு ஆகிய ஐவரும் முக்கியமானவர்கள். திருக்குறள் ஷோஜோவும் ஜப்பானியப் பெண் கோமோச்சியும் இந்த ஐவரையும் இம்பீரியல் பாலஸ் – கிழக்கு வாசல் மைதானத்துக்கு அழைத்துச் சென்று, “இங்கிருந்துதான் தேரோட்டம் தொடங்கப் போகிறது” என்றார்கள். “அடேயப்பா!