கதையாசிரியர் தொகுப்பு: சரோஜா ராமமூர்த்தி

2 கதைகள் கிடைத்துள்ளன.

அன்னை

 

 சுள்ளிக் கத்தையை ‘மளுக் மளுக்’ கென்று முறித்து வைத்து ஊதாங் குழலினால் ‘சுர் ‘ரென்று அடுப்பை ஊதி விட்டாள் செல்லி. அடுப்பின் மீது இருந்த சோற்றுப் பானையில் அரிசி ‘தள தள’வென்று கொதிக்க ஆரம்பித்தது. குடிசையின் மூலையில் முடங்கிக் கிடந்தான் துரை என்கிற அவள் மூத்த மகன். இளைய பையன் கதிர்வேலு மட்டும் மிகவும் விழிப்பாகத் தாயின் எதிரில் சோற்றுக் கிண்ணத் துடன் சாப்பாட்டுக்காகக் காத்திருந்தான். செல்லி சோற்றை வடித்து நிமிர்த்தியதும் பக்கத்தில் இருந்த அகலமான சட்டியில்


முதல் கடிதம்

 

 1 நாகஸ்வரக்காரனும் ஓய்ந்து போன மாதிரியிருந்தது. அவன் ஆடி வழிந்து கொண்டு மத்தியமாவதி ராகம் வாசித்து வந்த மாதிரியிருந்தது! ஆயிற்று, தம்பதிகள் பாலிகையைக் குளத்தில் விட்டதும் அவனும் மங்களம் பாடிவிட்டுத் தாம்பூலமும் சம்மானமும் பெற்றுக்கொண்டு போவதற்குத் தயாராக இருந்தான். கல்யாண வீட்டில் எல்லோரும் ஓய்ந்து போயிருந்தார்கள். ”எங்களால் முடியாது அம்மா. சின்னப் பெண்களாக நாலுபேர் கூடப் போயிட்டு வாருங்கள்” என்று கூறிவிட்டுப் பெரியவர்கள் கல்யாணத்தில் பட்ட சிரமத்துக்குப் பரிகாரம் தேட முயன்று கொண்டிருந்தார்கள். ஜயலஷ்மிக்கும் சீனிவாசனுக்கும் –