கதையாசிரியர் தொகுப்பு: சரண்

10 கதைகள் கிடைத்துள்ளன.

பார்றா…

 

  நான் சிறுவனாக இருக்கும் போது பார்த்த உலகம் வேறு. இப்போது குழந்தைகளுக்கு நாம் காட்டும் உலகம் வேறு. தொழில்நுட்பத்தில், பலவித வசதிகளில் உலகம் மேம்பட்டிருந்தாலும் உறவுகளைப் பேணுவதில் நாம் மிகமிக பின் தங்கிய நிலைக்கு சென்று கொண்டிருப்பதாக தோன்றுகிறது. சுருங்கச் சொன்னால் சகிப்புத்தன்மை குறைந்து விட்டதே எல்லா பிரச்சனைக்கும் முழு முதல் காரணம். சகிப்புத்தன்மை என்பது பிறர் மீது அன்பு செலுத்துவதால் வருவது. ஆனால் மற்றவர்தான் என்னிடம் அன்பு செலுத்த வேண்டும், என்னை சகித்துக் கொள்ள


மிஸ்டு கால்

 

  காதல் என்றால் மிஸ்டுகால் இல்லாமல் இருக்காது. அதே போல் ராங்நம்பர் போட்டு நட்பாக (?!) தொடங்கி காதலில் முடிந்தது என்று பேப்பரில் செய்திகளைப் படித்திருக்கிறோம். இரண்டு முறை ராங்நம்பர் போட்ட ஆசாமியை நம்பி நாகர்கோயிலில் இருந்து சென்னைக்கு ஒரு பெண் ஓடி வந்திருக்கிறாள். இந்த சம்பவத்தில் ஆச்சர்யம் என்னவென்றால் போனில் பேசிய அந்த நபரும் திருமணமாகாதவனாக இருந்திருக்கிறான். அதைவிட இன்னொரு வியப்பு, அந்த பையன் குடும்பத்தினரும் இந்த திடீர் காதலுக்கு ஆதரவாக இருந்திருக்கிறார்கள். இது மாதிரி


நண்பன்

 

  1996ஆம் ஆண்டு கோடை விடுமுறை தொடங்கிய நேரம்: திருவாரூர் அய்யனார் கோவில் தெருவில் இருந்த முடிதிருத்தகத்தின் வாசலில் போடப்பட்டிருந்த பெஞ்ச்சில் இரண்டு சிறுவர்களின் அமர்ந்து பேப்பர் படித்துக்கொண்டிருந்தார்கள். “டேய்…வர்ற 9ஆம் தேதி இந்தியன் படம் ரிலீசாகுதுடா…¬ஷங்கர் டைரக்சன். படம் சூப்பரா இருக்கும். கமல் ஹீரோ.கேட்கவா வேணும்…தைலம்மை தியேட்டர்ல வரப்போகுது. நான் முதல்நாளே போய்டுவேம்பா…” என்றான் வடிவேல். “ச்சே…நம்ம ஊர்ல ஏ/சி தியேட்டர் இல்லடா. இருக்குற தியேட்டர்லயும் ஏசி மிசின் ரிப்பேராயிடுச்சாம். இங்க பாரேன். தஞ்சாவூர் விஜயா


காதல்

 

  தஞ்சாவூரில் உள்ள ஒரு மருந்து விநியோகநிறுவனத்தில் வேலைசெய்வதால் என்னுடைய முக்கியப்பணியே ஊரில் உள்ள அனைத்து மருந்து கடைகளுக்கும் சென்று ஆர்டர் எடுப்பதுதான். அன்று வழக்கம்போல் நான் அந்த மருந்துக்கடைக்குச் சென்றபோது வாசுதேவன் என்னைப்பார்த்து புன்னகைத்துவிட்டுக் கிளம்பினார். “என்ன இந்த ஆளு…ஒவ்வொருநாளும் ஒவ்வொரு கடையில மருந்து வாங்கிட்டு திரியிறாரு? எல்லா கடையிலயும் கடன் சொல்லிட்டுப் போறாரோ?” என்று நான் சாதாரணமாகத்தான் கேட்டேன். “டேய் ராமமூர்த்தி…உடம்பு வலியால ராத்திரிஎல்லாம் தூங்கமுடியலை.நாங்க வலிதாங்காம கத்திகிட்டு இருக்குறதால மத்தவங்களுக்கும் தூக்கம் கெடுது.என்னால


நேசம்

 

  ஏங்க…இந்தக் கதையைக் கேட்டீங்களா…நம்ம பொண்ணுக்கு கல்யாணம் முடிஞ்சு ஒரு வாரம்தான் ஆகுது. புதுப்பொண்டாட்டியை அழைச்சுக்கிட்டு ஊட்டி, கொடைக்கானல்னு போகாம, தன் அம்மா அப்பாவையும் அழைச்சுக்கிட்டு மதுரை, திருச்செந்தூர்னு கோயில் கோயிலா அலையப் போறாராம் மாப்பிள்ளை. இந்தக் கொடுமையை எங்க போய் சொல்றது?”என்று கணவனிடம் புலம்பினாள் மங்கையர்க்கரசி.” “பொதுவா பொண்ணு வீட்டுல கேட்டு வாங்குற வரதட்சணை, சீர்வரிசையைப் பத்தி மாப்பிள்ள புது விளக்கம் கொடுத்ததும் எல்லாருமே அசந்துட்டீங்க. ஆனா இப்ப மாப்பிள்ள நடந்துக்குறதைப் பார்த்தா பொண்டாட்டிகிட்ட தனியா