கதையாசிரியர் தொகுப்பு: சரணமுதன் நற்குணன்

1 கதை கிடைத்துள்ளன.

அலர்

 

  “அவளைத் தொடர்வதை நிறுத்திக்கொள். வேலையை மட்டும் செய்.” எனது கைப்பேசி திரையை நண்பனின் அக்கறையான கோபம் பற்றவைத்தது. ஆழ்ந்த உறக்கம் இன்னமும் என் கண்களில் இருந்து கழன்றவில்லை. எல்லாம் அமைதியாகி விட்டது என நினைத்தேன், இனிமேல் அலை காணா கடல் போல வாழ்க்கைச் செல்ல நினைத்தேன். ஆனால், அம்மாவாசையில் உள்வாங்கும் கடல் போல வாழ்வும், பொருளும், திறமையும், செயலும் அனைத்தும் உள்வாங்கியது. இது யாவும் நடக்கும் என தெரிந்திருந்தால் அவளைக் கண்டிருக்க மாட்டேன்; பேசிருக்க மாட்டேன்;