கதையாசிரியர் தொகுப்பு: சரசா சூரி

5 கதைகள் கிடைத்துள்ளன.

நாய்ப் பாசம்…

 

  பெங்களூரு சென்னை highway யில் சென்னைக்கு சமீபமாய் , வேப்பம்பட்டு பஸ் நிறுத்தத்தை ஒட்டி அமைந்திருந்தது அந்த டீக்கடை.. டீக்கடை என்று சொன்னால் கந்தசாமிக்கு பொல்லாத கோவம் வந்து விடும். ‘ போர்டை நல்லா பாருங்க’….. என்பான். ” 5 T Stall” !!!!…. என்றது போர்ட்….. அந்த டீக்கடையின் ஏக போக உடமஸ்தன் கந்தசாமி தான். முப்பது வயது தான் இருக்கும். யார் யார் காலிலோ விழுந்து இந்த இடத்தில் டீக்கடை போட்டு விட்டான்.


பறக்கத் துடிக்கும் பறவைகள்

 

  நான் அமெரிக்கா செல்வது இது ஒண்ணும் முதல் தடவை கிடையாது. ஆனாலும் தனியாக போவது இது தான் முதல்.!!!!! இது ஆறாவது தடவை என்றால் நம்ப முடிகிறதா? இது தான் கடைசி என்று சொல்லிக் கொண்டே ஆறு தடவை ஆகிவிட்டது.இது ஒன்றும் பெரிய அதிசயமில்லை. அநேகமாக குழந்தைகளை வெளிநாட்டுக்கு அனுப்பும் எல்லார் கதியும் இதுதான். ஆரம்பத்தில் ஒரு குஷியுடன்தான் கிளம்புவோம். போகப் போக சுரத்து கம்மியாகிவிடுகிறது….. ” அம்மா just மூணு மாசம்……. குழந்தைகளும் பாட்டி


நூற்றுக்கு நூறு

 

  ஆல்பம் பலவிதம். கல்யாண ஆல்பத்துக்குத்தான் முதல் இடம்..கட்டு சாதக்கூடை எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் இந்த ஆல்பம். இப்போ பொண்ணுக்கு எத்தனை நகை போடுவீர்கள் என்ற பேச்சு போய் எவ்வளவு ஆல்பம் பண்ணப்போறீங்க என்பதாயிருக்கிறது. கல்யாணம் முடிந்து தப்பித் தவறி யார் வீட்டுக்கும் போனால் அவ்வளவு தான்! பொத்தென்று மடிமீது கனக்கிறதே என்று பார்த்தால் குறைந்தது நாலு அல்லது அஞ்சு ஆல்பம். “பாத்துண்டே இருங்கோ இதோ காபி கலந்துண்டு வரேன்”. மாமி மாயமாகி விடுவார். வரும்போது


தூக்கத்தை தொலைத்தவன்

 

  சேரன் எனக்கு பிடித்த Train! பத்து மணிக்கு மேல் கிளம்புவதால் எல்லா வேலைகளையும் முடித்து விட்டு ( நான் ஒண்டிக்கட்டை) வீட்டையும் clean பண்ணி ,ஒரு பஸ்ஸை பிடித்தால் பத்து நிமிஷத்தில் station. புத்தகக் கடையில் , நக்கீரன், குமுதம், விகடன் என்று சில வாரப்பத்திரைகள் ( வீட்டில் படிப்பது பகவத்கீதையும் உபநஷத்தும்) வாங்கிக் கொண்டு பிளாட்பாரம் போனால் சேரன் தயாராக இருந்தான். சுகமான upper berth.யார் தொந்தரவும் இல்லாமல் ஏறிப்படுத்தால் சென்னையில் தான் முழிப்பு!


புதுச்செருப்பு

 

  சீதாராமன் ஒன்றும் பயந்த சுபாவம் உடையவர் என்று சொல்ல முடியாது. ‘வலுச்சண்டைக்கு போகமாட்டார். வந்த சண்டையை விடமாட்டார் ‘ரகம்’. ஆனாலும் அவர் பயப்படுவது இரண்டே விஷயத்துக்குத்தான். ஒன்று dentist visit. இன்னொன்று செருப்பு வாங்கப் போவது.. இரண்டுக்கும் சம்பந்தம் இல்லைதான். பல் மருத்துவர் அவரை சுழல் நாற்காலியில் உட்காரவைத்து , முகத்துக்கு நேரே light ஐ காட்டி , வாய்க்குள் நீளமாய் எதையோ வைத்து அழுத்தும்போதே பாதி உயிர் போய் விடும். Car Mechanic Shop