கதையாசிரியர் தொகுப்பு: சந்திரா

14 கதைகள் கிடைத்துள்ளன.

கள்வன்

 

  வண்டுகளும் ஓசை எழுப்பாத அர்த்த ஜாமத்தில், நிறைமாதக் கருவைச் சுமந்தபடி, உறங்காமல் விழித்துக் கிடந்தாள் முத்துமாயனின் மனைவி மூக்கம்மா. கருப்பசாமி கோயிலில் இருந்த மரங்கள் ஆடிக் காற்றில் சரசரத்து, ஒன்றோடொன்று உரசிக் கிளைகள் முறிந்தபோது அவளுக்கு வலி கண்டது. தாமரைக் குளத்தின் மேட்டிலிருந்த வீட்டில் இவள் மட்டும் தனித்திருந்தாள். ஈரம் அப்பிய குளத்தங் கரையில், தவளைகள் கண்களில் பயத்தைத் தேக்கிவைத்துக் கத்தவா, வேண்டாமா என்று யோசித்துக் கொண்டு இருந்தன. சாரைக்காற்று செம்மண் சுவரைத் துளைத்து வீட்டுக்குள்


புளியம் பூ

 

  தோப்பை விற்பதற்கான எல்லாக் கையெழுத்தும் முடிந்தது. தோப்பை வாங்கும் வட்டிக்கடைப் பாண்டியன் பணத்தை அப்பாவிடம் நீட்டினார். ‘அவங்ககிட்டயே கொடுங்க’ என்று அப்பா அண்ணனைக் காட்டிவிட்டு வெளியேறினார். அண்ணன் பணத்தை வாங்கிக்கொண்டு, ‘நீங்க பஸ்ல வந்திருங்க’ என்று எங்களிடம் சொல்லிவிட்டுப் புதிதாக வாங்கியிருக்கும் கருமையும் நீலமும் கலந்த மோட்டார் சைக்கிளில் ஏறிப் பறந்துவிட்டான். நான், அம்மா, அக்கா மூவரும் பஸ் ஸ்டாண்டை நோக்கி நடந்துகொண்டிருந்தோம். அம்மாவுக்கு அழுகையை அடக்க முடியவில்லை. சேலைத் தலைப்பால் முகத்தை மூடிக்கொண்டாள். அக்கா,


பூச்சி

 

  கதை ஆசிரியர்: சந்திரா. அவன் பொரி வண்டியின் மணிச்சத்தமும் வண்டியில் இருந்த லாந்தர் விளக்கின் வெளிச்சமும் அந்தத் தெருவின் இருளை விலக்கிக்கொண்டு போயின. அவன் சைக்கிளைத் தள்ளிக்கொண்டே வந்தான். ஒரு கையில் மணியடித்துக்கொண்டே, இன்னொரு கையில் ஹேன்டில் பாரைப் பிடித்துக்கொண்டு பேலன்ஸ் செய்வது கடினமாகத்தான் இருந்தது. மிக இருட்டான கீழ்முக்குத் தெரு வந்ததும் சைக்கிளை நிறுத்திவிட்டுத் தொடர்ந்து மணியடித்துக்கொண்டிருந்தான். அந்த இருட்டு அவனுக்கு மிகவும் பிடித்தமானதாக இருந்தது. யார் முகத்தையும் அவன் பார்க்க விரும்பவில்லை. அதேபோல்


பூனைகள் இல்லாத வீடு

 

  கதை ஆசிரியர்: சந்திரா. எங்கள் தெருமுழுக்கத் தோரணம் கட்டியிருந்தார்கள். மாவிலை மணத்துக்கொண்டிருந்தது. அண்ணனும் நானும் ஒலிநாடாவின் இசையை அதிகப்படுத்திக்கொண்டிருந்தோம். ஒலி பெருத்து, தெப்பங்குளம் தாண்டி மீனாட்சி அம்மன் கோவில் வரை கேட்டிருக்கும் போலிருக்கிறது. எங்கள் தெரு முழுக்க கூட்டம் நிரம்பி வழிந்திருந்தது. நான் புதிதாய்ப் போட்டிருந்த பச்சை கலர் கோடு போட்ட வெள்ளைச் சட்டையும், கால்களை மூழ்கிக்கொண்டிருந்த நீல பேண்ட்டுமாய் வாசலில் நின்ற கூட்டத்தை கர்வத்துடன் பார்த்தேன். அம்மாவின் பட்டுப்புடவையைப் போன்று அக்காவும் கத்தரிப்பூ நிறத்தில்


கிழவி நாச்சி

 

  கதை ஆசிரியர்: சந்திரா. எங்கள் வீட்டின் காலியான பெரும் பரப்பு எப்போதும் சினேகிதர்கள் மத்தியில் எனக்குப் பெரும் மதிப்பைப் பெற்றுத் தந்திருந்தது. குட்டிக் குட்டியாகக் கூரை வேய்ந்த இரண்டு மண் வீடுகள், ஒரு கோழித் திண்ணை, படல் அடைத்த குளியலறை தவிர மீதி இடமெல்லாம் வெட்ட வெளியாகத் திறந்து கிடக்கும். கில்லி, கிட்டி குச்சி, பச்சைக் குதிரை, கோலிக் குண்டு, இப்படி எந்த விளையாட்டானாலும் எங்கள் வீடுதான் மைதானம். இதனாலேயே எனக்கு நிறைய நண்பர்கள் இருந்தார்கள்.